- Advertisement -
- Advertisement -

மனிதர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது இந்த பணம். பணத்தை எளிதில் ஈர்க்கக் கூடிய வித்தையை நாம் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். வாழ்க்கையில் பெரிய அளவில் போராட வேண்டிய அவசியமே இருக்காது. மனிதர்களுடைய இந்த அழகான வாழ்க்கையை, சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய ஒரு பொருள் பணம். இந்த பணத்தை, மகாலட்சுமியை வசியம் செய்வதற்கு ஒரு எளிமையான வழியைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த 3 வசிய பொருட்களும் வெறும் பணத்தை மட்டும் ஈர்த்தது கொண்டு வந்து உங்கள் கையில் கொடுக்காது. நேர்மறை ஆற்றல், வெற்றி, சுறுசுறுப்பு, அனைத்தையும் கொண்டு வந்து உங்கள் கையில் சேர்க்கும். உங்கள் கையில் இருக்கும் 10 ரூபாய் பணத்தை பல ஆயிரம் ரூபாயாக மாற்றி காட்டும் அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த அந்த 3 பொருள் என்னென்ன இந்த பரிகாரத்தை எப்படி செய்வது.

- Advertisement -

பணத்தை இரட்டிப்பாக்கி தரும் பரிகாரம்

மிக மிக எளிமையாக நமக்கு கிடைக்கக்கூடிய பொருள் அருகம்புல், தர்ப்பைப்புல், மரிக்கொழுந்து, இந்த மூன்று பொருட்களுக்கும் நல்லவற்றை அப்படியே ஈர்த்துக் கொண்டு வந்து கொடுக்கக் கூடிய சக்தி அதிக அளவில் உள்ளது. இந்த பிரபஞ்சத்திடம் இருக்கும் மிகப்பெரிய பேராற்றலை எல்லாம் கூட சுலபமாக ஈர்த்து விடும். நமக்கு சுலபமாக இந்த பொருட்கள் கிடைப்பதால், இதனுடைய அருமை பெருமைகள் தெரிவதில்லை.

அந்தப் பிள்ளையாருக்கே ரொம்பவும் பிடித்த பொருள் அருகம்புல். நிறைய நேர்மறை ஆற்றலை தன்னகத்தே ஈர்க்கக் கூடிய தன்மை கொண்டது. தர்பை புல், மகத்துவமான காரியங்களுக்கு பயன்படுத்தப்படும் மகத்துவமான ஒரு பொருள். மரிக்கொழுந்தின் வாசம் மயகனங்காத ஆளே இல்லை. இந்த மூன்று பொருட்களையும் எடுத்து ஒரு விரல் அளவுக்கு மடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எல்லா பொருட்களில் இருந்தும் இரண்டு என்ற எண்ணிக்கை எடுத்தால் கூட போதும். இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக வைத்து ஒரு மஞ்சள் நூலில் கட்டி பத்து ரூபாய் நோட்டிற்கு நடுவே, கட்டியை இந்த பொருட்களை வைத்து அப்படியே சுருட்டுங்கள். மீண்டும் மேலே ஒரு மஞ்சள் நூல் போட்டு இந்த பத்து ரூபாய் நோட்டை கட்டி, உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, என்னை நோக்கி நிறைய பணம் வரும்.

பணத்தை நான் எளிதாக ஈர்ப்பேன். சீக்கிரம் நான் பணக்காரராக மாறுவேன். இந்த பத்து ரூபாய் சீக்கிரமாக 10,000 ரூபாயாக மாறும் என்று சொல்லி பீரோவில் வைத்து விடுங்கள். இவ்வளவுதான் பரிகாரம். அந்த பணத்தையும் மாற்ற வேண்டாம். பணத்தின் உள்ளே இருக்கும் பொருளையும் மாற்ற வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: சகல செல்வங்களையும் தரும் மகாலட்சுமி பூஜை

48 நாட்கள் அது அப்படியே இருக்கட்டும். பிறகு பாருங்கள் உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய மாற்றம் தெரியும். இந்த பணத்தை இரட்டிப்பாக்க மட்டும்தான் இந்த பரிகாரமா என்று கேட்டால் கிடையாது. இதேபோல இந்த மூன்று பொருட்களை தயார் செய்து உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, நீங்கள் எந்த நல்ல காரியத்திற்கு சென்றாலும் அந்த நல்ல காரியம் நிச்சயம் சக்சஸ். காரிய தடை வராது. நேர்மறை ஆற்றலை ஈர்க்க பணப்புழக்கத்தை அதிகரிக்க, இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -