- Advertisement -
ஜாதகம் பார்பது எப்படி

ஜோதிடம் : உங்களுக்கு ஏற்படும் பாதக கிரக தோஷங்கள் நீங்க இதை செய்யுங்கள்

ஜோதிட கலை என்பதே வானில் இருக்கும் ஒன்பது கிரகங்களின் இயக்கங்களை அடிப்படையாக கொண்டு மனிதர்களின் வாழ்வில் ஏற்படக்கூடிய பலன்களை கூறும் ஒரு சாஸ்திரமாகும். இதில் ஒரு நபர் பிறந்த லக்னத்திற்கு பாதகமான பலன்களை தரும் கிரகம் பாதகாதிபதி என அழைக்கப்படுகிறது. இந்த பாதாகாதிபதி கிரகங்களால் நமக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம், ரிஷபம் லக்னங்களுக்கு – சனி பகவானும், மிதுனம், கன்னி லக்னங்களுக்கு – குரு, கடகம், கும்பம் லக்னங்களுக்கு – சுக்கிரன், சிம்மம், மகர லக்னங்களுக்கு – செவ்வாய், தனுசு, மீனம் லக்னங்களுக்கு – புதன், துலாம் லக்னத்திற்கு – சூரியன், விருச்சிக லக்னத்திற்கு – சந்திரன் 12 லக்னங்களுக்கும் நவகிரகங்கள் பாதகாதிபாதியாக வருகின்றனர்.

- Advertisement -

மேலே சொல்லப்பட்ட பாதகாதிபதிகள் தங்களின் திசா புக்தி காலங்களில் ஜாதகருக்கு மிகவும் பாதகங்களை தருவர். சிலருக்கு உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் கண்டங்களும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். ஜாதகத்தில் பாதகாதிபதி எந்த கிரகம் என்பதை அறிந்த பிறகு அதற்கேற்ற பரிகார முறைகளை நாம் மேற்கொள்வாதால் ஜாதகத்தில் பாதகாதிபதியாக இருக்கும் கிரகங்களின் பாதிப்புகளில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.

சூரியன் பாதகாதிபதியாக வருகின்ற நபர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிவன் வழிபாட்டினை மேற்கொள்வதால் சூரியனால் ஏற்படும் பாதிப்புகளை போக்கலாம். சந்திரன் பாதகாதிபதியாக வருகின்ற ஜாதகர்கள் திங்கட்கிழமைகளில் பார்வதி தேவியை வணங்குவதால் பாதிப்புகள் நீங்கும். செவ்வாய் பாதகாதிபதியாக வரும் ஜாதக அமைப்பை கொண்டவர்கள் செவ்வாய்கிழமைகள் தோறும் முருக பெருமானை வணங்குவதால் பாதிப்புகளை தடுக்கலாம்.

- Advertisement -

புதன் பாதகாதிபதியாக வரும் ஜாதகர்கள் புதன் கிழமைகள் தோறும் விஷ்ணு பகவானை வழிபடுவதால் புதனால் ஏற்படும் பாதக பலன்களை குறைக்க முடியும். குரு பகவான் பாதகாதிபதியாக அமைய பெற்ற ஜாதகர்கள் வியாழக்கிழமைகளில் பிரம்மா மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்வது நன்மையை தரும். சுக்கிரன் பாதகாதிபதியாக அமைய பெற்ற நபர்கள் வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி வழிபாடு மேற்கொள்வதால் பாதக பலன்களை தடுக்க முடியும். சனி பாதகாதிபதியாக அமைய பெற்ற ஜாதகர்கள் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்வதால் நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ஜாதகத்தில் ராஜயோகம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pathagathipathi in Tamil. It is also called as Navagraha jothidam in Tamil or Jothidam graha palangal in Tamil or Grahangal jathagam in Tamil or Pathagathipathi palan in Tamil.

- Advertisement -