உங்கள் ஜாதகத்தில் ராஜயோகம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?

Sukran peyarchi astrology
- Advertisement -

உலகில் பல கோடி மக்கள் பிறந்திருந்தாலும், அனைவருமே மிக உயர்வான ஒரு வாழ்க்கை நிலையை அடைந்து விட முடியாது. ஒரு சிலர் மட்டும் பணம், புகழ் என்று மிக சிறப்பான வாழ்க்கை வாழ அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் யோகங்கள் காரணமாக இருக்கலாம் என்பது ஜோதிடர்களின் கருத்து. அந்த வகையில் ஒருவரின் ஜாதகத்தில் ராஜயோகம் ஏற்படுவதற்கான அமைப்பு பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

astro wheel 1

ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் எனப்படும் முதல் வீட்டிலிருந்து எட்டாவதாக இருக்கும் 8 ஆம் வீடு என்பது ஆயுள் ஸ்தானமாகும். இந்த 8 ஆம் வீட்டில் பாப கிரகங்கள் இல்லாமல் சுப கிரகங்கள் இருப்பது தான் நல்லது. அதிலும் இந்த எட்டாம் வீட்டில் குரு பகவானுக்கு அடுத்து சுப கிரகமாக இருக்கும் சுக்கிரன் இருப்பது மிகவும் சிறப்பான அமைப்பாகும்.

- Advertisement -

புராணங்கள் படி பார்த்தோமேயானால் சுக்கிரன் பகவான் அசுரர் குலத்தினருக்கு குருவாக இருப்பவர். இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரம் தெரிந்தவர். சுக போகங்களுக்கு அதிபதி. எனவே ஒருவரின் ஜாதகத்தில் 8 ஆம் இடம் எனப்படும் ஆயுள் ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் அவருக்கு நீண்ட ஆயுளும், எளிதில் நோய்கள் அணுகா உடல் ஆரோக்கியமும் பெற்றவராக இருப்பார்.

Sukran peyarchi astrology

மேலும் இந்த 8 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்கும் போது, அவரது பார்வை லக்னத்திற்கு அடுத்த வீடான இரண்டாம் வீட்டின் மீது இருக்கும். இப்படி சுக்கிரன் இரண்டாம் இடத்தை பார்க்கும் அமைப்பு கொண்ட ஜாதகம் முதல் தரமான ராஜயோக ஜாதகம் என்று அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களால் கருதப்படுகிறது. இத்தகைய ராஜயோகத்தால் அந்த ஜாதகருக்கு மிக சிறந்த பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவு இருக்கும். பொன் ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும். லட்சமி கடாச்சம் உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கலாநிதி யோகம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sukran rajayogam in Tamil. It is also called as Jathagam sukran palan in Tamil or Rajayogam in Tamil or Yogam in jathakam Tamil.

- Advertisement -