
புரட்டாசி மாதம் என்பதே பெருமாளுக்கு உரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட பெருமாளுக்குரிய மாதத்தில் பெருமாளுக்குரிய திதியான ஏகாதசி திதி மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமை அன்று சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பை தரும். மேலும் இன்றைய நாள் புரட்டாசி மாதத்தின் கடைசி நாளாகவும் திகழ்கிறது. இந்த நாளில் நாம் பெருமாளை வழிபாடு செய்யும்பொழுது பெருமானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அப்படிப்பட்ட பெருமாளுக்குரிய இந்த நாளில் நாம் எந்த மந்திரத்தை கூறினால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு உயரும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் இருக்கக்கூடிய வெங்கடாசலபதிக்கு சிறப்பான பிரம்மோற்சவம் நடைபெறும். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் பலரும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். அப்படிப்பட்ட ஏழுமலையானை புரட்டாசி மாதம் முழுவதுமே நினைக்காதவர்கள் கூட இந்த புரட்டாசி மாதத்தின் கடைசி நாள் அன்று நினைத்து மந்திரங்களை கூறி வழிபாடு செய்வதன் மூலம் அவரின் அருளாலும் பத்மாவதி தாயாரின் அருளாலும் செல்வ செழிப்புடன் வாழ முடியும்.
இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்தவித தடைகளும் கிடையாது. இந்த மந்திரத்தை இன்று காலையிலிருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் கூறலாம். யார் வேண்டுமானாலும் கூறலாம். இந்த மந்திரத்தை அசைவத்தை சாப்பிட்டு இருப்பவர்கள் கூட கூறலாம். அதே போல் பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம். எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை தரிசனம் செய்துவிட்டு இந்த மந்திரத்தை கூறும் பொழுது அதிக அளவில் பலன் கிடைக்கும்.
இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக திருப்பதியில் இருக்கக்கூடிய வெங்கடாசலபதி பெருமாளையும் பத்மாவதி தாயாரையும் மனதார நினைத்துக் கொண்டு கூற வேண்டும். தொடர்ச்சியாக 20 நிமிடம் இந்த மந்திரத்தை கூறினால் போதும். நிறுத்தி நிதானத்துடன் பத்மாவதி சமேத சீனிவாச பெருமாளை நினைத்துக் கொண்டு கூறுபவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் நீங்குவதோடு மகாலட்சுமி தாயாரின் அருளால் செல்வ செழிப்பு உயரும் என்று கூறப்படுகிறது.
” ஸ்ரீ பத்மாவதி பிரியா கோவிந்தாய நமஹ “
இதையும் படிக்கலாமே: மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ சஷ்டி திதியில் கூற வேண்டிய மந்திரம்
எளிமையான இந்த மந்திரத்தை முழுமனதோடு கூறி செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்கி செல்வ செழிப்புடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.