- Advertisement -
Homeமந்திரம்மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ சஷ்டி திதியில் கூற வேண்டிய மந்திரம்

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ சஷ்டி திதியில் கூற வேண்டிய மந்திரம்

- Advertisement -

சூரிய பகவானுக்குரிய கிழமையாக திகழக்கூடிய ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்ந்து வரக்கூடிய சஷ்டி திதி அன்று நாம் முருகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது முருகப்பெருமானின் அருளாலும் சூரிய பகவானின் அருளாலும் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான முன்னேற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக உடல் ஆரோக்கியம் தொடர்பான வேண்டுதல்களும் வேலை தொடர்பான வேண்டுதல்களும் அதிவிரைவில் பூர்த்தி அடையும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சஷ்டி திதி அன்று கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சஷ்டி மந்திரம் வழிபாடு

முருகப் பெருமானை வழிபாடு செய்வதற்குரிய அதி அற்புதமான விரத நாட்களில் ஒன்றாக தான் சஷ்டி திதி திகழ்கிறது. அப்படிப்பட்ட சஷ்டி திதி ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வருவது என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் நாம் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தாலும் சரி விரதம் இருக்காமல் வழிபாடு செய்தாலும் சரி முருகப்பெருமானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அப்படி முருகனின் அருளை நாம் பெற்று விட்டோம் என்றால் நம் வாழ்வில் எதுவெல்லாம் பிரச்சனையாக இருக்கிறதோ அந்த பிரச்சனை அனைத்தும் நீங்கி நல்லதொரு வாழ்க்கை அமையும்.

- Advertisement -

இந்த மந்திர வழிபாட்டை அக்டோபர் மாதம் 12ஆம் தேதி அதாவது இன்றைய நாள் மாலை 5 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் கூறலாம். அசைவம் சாப்பிட்டு இருந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களும் கூறலாம். ஆனால் இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக முகம் கை கால்களை கழுவி விட்டு கூற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம்.

சுத்தபத்தமாக இருக்கக்கூடிய நபர்கள் பூஜை அறைக்குள் முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து அவருக்கு ஒரு சிறிய கிண்ணத்தில் தேனை வைத்து முழுமனதோடு முருகப்பெருமானின் இந்த மந்திரத்தை 20 நிமிடம் நிறுத்தி நிதானத்துடன் கூற வேண்டும். ஒருவேளை பூஜை அறைக்குள் செல்ல இயலாது என்பவர்கள் வீட்டில் அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு முழு மனதோடு முருகப்பெருமானையும் வள்ளி தேவயானியையும் நினைத்து இந்த மந்திரத்தை கூற வேண்டும். எந்தவித வேண்டுதலையும் முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை. முருகனே நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தந்து விடுவார்.

- Advertisement -

மந்திரம்

” ஓம் குகேஷாய நமஹ “

இதையும் படிக்கலாமே: கோரிக்கையை நிறைவேற்றும் கிருத்திகை சங்கடஹர சதுர்த்தி மந்திரம்

எளிமையான இந்த முருகனின் மந்திரத்தை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்துக் கொண்டு யார் ஒருவர் இன்று இரவுக்குள் கூறுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும், மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்