
புரட்டாசி மாதம் புண்ணியமான வாரம். உங்களுக்கு புண்ணியத்தை தேடி தரக்கூடிய மாதம். இந்த மாதத்தில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன. செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன. நமக்கு இருக்கக்கூடிய நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால், கடன் சுமை குறைய வேண்டும் என்றால், செல்வ செழிப்பில் பெரிய குபேரனாக மாற வேண்டும் என்றால் புரட்டாசி மாதம் முழுவதும் எந்த தீர்த்தத்தை பருக வேண்டும் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
புரட்டாசி மாதத்தை புண்ணிய மாதம் என்று சொல்லிவிட்டோம். ஆகவே இந்த புரட்டாசி மாதத்தில் பாவம் சேர்க்க கூடிய எந்த காரியத்தையும் செய்யாதீர்கள். இதை நீங்கள் அறிவியல் ரீதியாக எடுத்துக் கொண்டாலும் சரி, ஆன்மீக ரீதியாக எடுத்துக் கொண்டாலும் சரி, இந்த புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது.
அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் சரி அல்ல, ஆன்மீக ரீதியாக உங்கள் வாழ்க்கையை சீர் செய்வதற்கும் சரி அல்ல, அதைப்போல நிறைய உயிரினங்களுக்கு உங்களால் முடிந்த தானத்தை உங்கள் கையால் செய்ய வேண்டும். நிறைய மரக்கன்றுகளை நடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.
அதுமட்டுமல்லாமல் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி மாதம் முழுவதும் தினமும் சென்று பெருமாளை வழிபாடு செய்து, அந்த கோவிலில் கொடுக்கும் தீர்த்தத்தை பருகி விட்டு, பெருமாள் சடாரியை தலை மீது வைத்துக்கொண்டு பெருமாள் கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து, உங்கள் கடன் சுமை தீர வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தால், நிச்சயம் இந்த புரட்டாசி மாதம் முடிவதற்குள் உங்கள் கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
புரட்டாசி மாதத்தில் தினமும் பெருமாள் தீர்த்தத்தை பருகுவது என்பது பெரும் பாக்கியம். அது உங்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம். முடிந்தவர்கள் இன்றிலிருந்து அல்லது நாளையில்லிருந்து இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு தரும் தீர்த்தத்தை பருகிக் கொள்ளுங்கள்.
கொஞ்சம் தீர்த்தத்தை வாங்கி வந்து நீங்கள் குடிக்கின்ற தண்ணீரில் சேர்த்து விட்டு, அந்த தண்ணீரை நாள் முழுவதும் பருகுவது, மிக மிக நல்ல பலனை கொடுக்கும். கோவிலுக்கு செல்ல முடியவில்லை பெருமாள் தீர்த்தம் கிடைக்கவில்லை என்ன செய்வது. நீங்கள் தண்ணீர் குடிப்பீர்கள் அல்லவா. அந்த குடிக்கின்ற தண்ணீரில் இரண்டு துளசி இலைகளை போட்டு அந்த தீர்த்தத்தை பருகுங்கள்.
இதையும் படிக்கலாமே: அதி சக்தி வாய்ந்த துர்க்கை அம்மன் வழிபாடு
துளசி தீர்த்தத்தை இந்த புரட்டாசி மாதத்தில் நீங்கள் எவ்வளவு குடிக்கிறீர்களோ, ‘கோவிந்தா நாராயணா பெருமாளே’ என்ற மந்திரத்தை எத்தனை முறை சொல்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் கடன் சுமை குறையும். கஷ்டங்களும் குறையும். உங்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தாலும் அது விலகும் என்பது நம்பிக்கை. மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த எளிய பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.