நிறைய பெண்கள் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் பெண்கள் துர்கை வழிபாடு செய்வது மிக மிக சிறப்பான பலனை கொடுக்கும். அதற்காக ஆண்கள் வழிபாடு செய்யக்கூடாதா என்று கேட்க வேண்டாம். ஆண்களும் இந்த வழிபாட்டை செய்யலாம். தவறு கிடையாது. யார் ஒருவர் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு துன்பமில்லை, துயரம் இல்லை, நஷ்டம் இல்லை இதுதான் நம்பிக்கை.
ராகு கால துர்க்கை வழிபாடு
ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்தால் ராகுவை திருப்தி செய்த பலனும் நமக்கு கிடைக்கும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்த பலனும் நமக்கு கிடைக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இந்த ராகுகால நேரத்தில் நாம் ஏற்ற வேண்டிய சக்தி வாய்ந்த ஒரு விளக்கை பற்றி தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பொதுவாக செவ்வாய்க்கிழமை ராகுகால நேரம் என்பது மதியம் 3:00 மணியிலிருந்து 4:30 வரை. அதுவே ‘செவ்வாய்க்கிழமை பிரம்ம முகூர்த்த, ராகு காலம் நேரம் என்பது புதன்கிழமை அதிகாலையில் 3:00 மணி முதல் 4:30 மணி வரை இருக்கும் காலகட்டமாகும். புதன்கிழமை அதிகாலை வேலையைத்தான் செவ்வாய்க்கிழமை பிரம்ம முகூர்த்த ராகுகால நேரம் என்று சொல்லி உள்ளார்கள்.
இந்த நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்தால் தீராத துன்பங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இந்த நேரத்தில் கோவிலுக்கு சென்று நாம் வழிபாடு செய்ய முடியாது. வீட்டிலேயே அமர்ந்து ‘ஓம் தும் துர்காயை நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி துர்க்கை அம்மனிடம் உங்களுடைய வேண்டுதலை வைத்துப் பாருங்கள் பின்பு நடக்கும் அதிசயத்தை நீங்களே உணருவீர்கள்.
பொதுவாக இந்த பிரம்ம முகூர்த்த வழிபாட்டை எல்லாம் எல்லோராலும் அவ்வளவு எளிதில் செய்து விட முடியாது. நீங்கள் செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்லுங்கள். ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்து கீழ்ப்பக்கத்திலிருந்து மேல் பக்கமாக கத்தியை வைத்து நறுக்க வேண்டும். எலுமிச்சம் பழத்துக்கு அடிப்பக்கத்தில் கத்தியை விட்டு மேல் நோக்கி அந்த எலுமிச்சம் பழத்தை நறுக்க வேண்டும்.
விளக்கு போடும்போது இப்படி எலுமிச்சம் பழத்தை நறுக்குவது தான் சரி. எலுமிச்சம்பழத்தை நறுக்கும்போது ‘ஓம் தும் துர்காயை நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி நறுக்கி எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து தலைகீழாக திருப்பிக் கொள்ளுங்கள். இதில் ஒரு பிரத்தியேகமான எண்ணெயை ஊற்றப் போகின்றோம்.
செம்பருத்தி தைலம், மருதாணி தைலம், இலுப்பை எண்ணெய், இது மூன்றையும் ஒன்றாக, சரிசமமான அளவில் ஒரு பாட்டிலில் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த முக்கூட்டு தைலத்தை அந்த எலுமிச்சம்பழம் விளக்கில் போட்டு, 3 திரிகளை ஒன்றாக திரித்து அந்த எண்ணெயில் போட்டு கோவிலில் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்து கொண்டால், உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்.
இதையும் படிக்கலாமே: வறுமை நீங்க விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் வழிபாடு
செவ்வாய்க்கிழமை மதியம் வரக்கூடிய ராகுகால நேரத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். கோவிலில் மட்டும்தான், துர்க்கை அம்மன் சன்னிதானத்தில் மட்டும் தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கான நல்லது உங்கள் வீடு தேடி வரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.