- Advertisement -

பிள்ளைகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்க ஹனுமன் வழிபாடு

- Advertisement -

பிள்ளைகள் நன்றாக படித்து, நல்ல வேலையில் அமர வேண்டும் என்பதுதான் பெற்றவர்களின் பெரிய கனவாக, ஆசையாக இருக்கிறது. ஆனால் சில பிள்ளைகள் படிக்கின்ற காலத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல், தவறான பாதையில் சென்று விடுகிறார்கள். நிறைய குழந்தைகள் தவறான சேர்கையின் மூலம், தவறான பழக்க வழக்கத்தின் மூலம் தடம் மாறி போகிறார்கள்.

அப்படிப்பட்ட பிரச்சனை உங்களுடைய பிள்ளைக்கும் இருக்கிறதா, அவர்களுக்கு படிக்கும் வயதிலேயே ஏதாவது கெட்ட பழக்கம் இருப்பது போல தெரிந்தால், அது கெட்டது என்று சொல்லியும், உங்களுடைய பிள்ளை அதற்கு செவி சாய்க்கவில்லை என்றால், அவர்களை சரி செய்ய அற்புதம் வாய்ந்த சக்தி வாய்ந்த ஒரு ஹனுமன் வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க ஹனுமன் வழிபாடு

வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று இந்த வழிபாட்டை செய்யலாம். அப்படி இல்லை என்றால் மாதம் தோறும் வரக்கூடிய பௌர்ணமி அன்று இந்த வழிபாட்டை செய்வது சிறப்பான பலனைத் தரும். இரண்டு மண் அகல் விளக்குகள் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான நெய் ஊற்றவும். அந்த நெய்யில் கொஞ்சமாக மஞ்சள் பொடி போட்டு கலக்க வேண்டும்.

நெய்யின் நிறம் மஞ்சள் நிறத்தில் மாறிவிட வேண்டும். இதில் மஞ்சள் நிற திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். கொஞ்சமாக மஞ்சள் பொடியில் தண்ணீர் ஊற்றி கலந்து, அதில் வெள்ளை நிற திரியை போட்டு நனைத்து நிழலிலேயே காய வைத்து, வீட்டிலேயே இந்த திரியை தயார் செய்து எடுத்து செல்லவும்.

- Advertisement -

மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும் நெய்யில், இந்த மஞ்சள் திரியை போட்டு அனுமனுக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய பிள்ளைகள் நல்லபடியாக படிக்க வேண்டும், அவர்களுக்கு இருக்கும் கெட்ட பழக்கம் விலக வேண்டும் என்று அனுமனிடம் பிரார்த்தனை வைத்துக் கொண்டால், போதும் உங்கள் குழந்தை கெட்ட பழக்கத்திலிருந்து விடுபடும். நன்றாக படிக்க தொடங்கிவிடும்.

உங்களுடைய பிள்ளைகள் இந்த வழிபாட்டை செய்யக்கூடிய அளவுக்கு சூழ்நிலை இருந்தால், நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்பார்கள் எனும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் கையாலேயே இந்த விளக்கை ஏற்ற சொல்லலாம். முடியாது என்ற பட்சத்தில் பிள்ளைகளுக்காக பெற்றவர்கள் இந்த விளக்கை ஏற்றி அனுமனை வழிபாடு செய்தால் ஹனுமன் உங்களுடைய பிள்ளைக்கு நல்ல புத்தியை கொடுத்து அவர்களை நல்வழி படித்து விடுவார்கள்.

- Advertisement -

பிள்ளைகள் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படிக்கக்கூடிய சமயத்தில் அவர்களுடைய மனது ஒரு நிலையாக இருக்காது. நாலா பக்கமும் அலைபாயும். அந்த சமயத்தில் அவர்களை சரியாக வழி நடத்தி விட்டால் அவர்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்கும். உங்களுடைய பிள்ளைகள் படிக்கும் வயதில் தடம் மாறிப் போகக்கூடிய சூழ்நிலை வந்தால் இந்த பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். என்னுடைய பிள்ளைக்கு இப்படி எந்த பிரச்சனையுமே கிடையாது.

இதையும் படிக்கலாமே: தடையில்லா பணப்புழக்கத்திற்கு பரிகாரம்

கெட்ட சாவகாசமும் கிடையாது. ஆனால் அவனுக்கு படிப்பு வரவில்லை. படிப்பில் ஆர்வம் வர வேண்டும் என்றால் இந்த பரிகாரத்தை செய்யலாமா, என்று கேட்டால் நிச்சயம் செய்யலாம். அந்த ஹனுமன் பிள்ளைகளை நல்வழிப்படுத்த ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து நிச்சயம் அருள் புரிவார் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -