
இன்று மஹா சங்கடஹர சதுர்த்தி. இன்று (22.8.2204) மாலை 6:30 மணிக்கு மேல் சந்திரன் உதயமான பிறகு தான், சதுர்த்தி வழிபாட்டை வீட்டில் மேற்கொள்ள வேண்டும். இன்று எதுவும் சாப்பிடாமல் காலையில் இருந்து நீங்கள் உபவாசம் இருந்து இந்த சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டாலும் சரி, அல்லது விரதம் இல்லை உபவாசம் இல்லை என்றாலும் சரி.
இன்று மாலை உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த மந்திரத்தை சொல்லி, பிள்ளையாரை வழிபாடு செய்தால் நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் அடுத்த 21 நாட்களுக்குள் பலிக்கும் என்பது நம்பிக்கை. இன்றைய தினம் மாலை நேரத்தில் நீங்கள் சொல்ல வேண்டிய அந்த மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
இன்று மாலை 6:30 மணிக்கு வழிபாட்டிற்கு பூஜை அறையை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். வழக்கம் போல விளக்கு ஏற்றி, பிள்ளையாருக்கு அருகம்புல் போட்டு ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, வழிபாட்டை துவங்கவும். இந்த வழிபாட்டில் 2 வெற்றிலை கட்டாயம் தேவை. 1 வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கப் போகின்றோம். 1 வெற்றிலையை பரிகாரத்திற்கு பயன்படுத்தப் போகின்றோம்.
சந்தனத்தை நன்றாக குழைத்து அதை உங்களுடைய வலது கை மோதிர விரலால் தொட்டு ஒரு வெற்றிலையில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ளுங்கள். கொஞ்ச நேரம் அது காயட்டும். பிறகு அந்த வெற்றிலையை அப்படியே எடுத்து உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு உங்களுடைய பிரார்த்தனையை விநாயகரிடம் சொல்லுங்கள்.
என்ன வேண்டுதல் வேண்டுமென்றாலும் வைக்கலாம். கடன் அடைய, வேலை கிடைக்க, ஆரோக்கியம் பெருக, குழந்தை பிறக்க, திருமணம் நடக்க, இப்படி வேண்டுதல் என்பது உங்களுடைய விருப்பம். வேண்டுதலை சொல்லி முடித்துவிட்டு பின் சொல்லக் கூடிய இந்த பிள்ளையார் மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.
ஐயும் கிலியும் சௌவும்
சௌவும் கிலியும் ஐயும்
விக்ன விநாயக ஸ்வாஹா !
மந்திரத்தை சொல்லிவிட்டு கையில் இருக்கும் வெற்றிலையை மஞ்சள் பிள்ளையார் முன்பு வைத்துவிட்டு, விநாயகருக்கு பால் பழம் நெய்வேத்தியம் வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் ஸ்வஸ்திக் வரைந்து வைத்த வெற்றிலையானது பிள்ளையாருக்கு முன்பாகவே இருக்கட்டும்.
இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கட்ட செய்ய வேண்டிய தானம்
நாளைய தினம் அந்த வெற்றிலை, மஞ்சள் பிள்ளையார் எல்லாம் வாடிய பிறகு எடுத்துச் செடி கொடிகளுக்கு கீழே கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இன்று மாலை விநாயகரை நினைத்து இந்த எளிமையான மந்திரத்தை சொல்லி இந்த எளிமையான வழிபாட்டை வீட்டில் செய்தாலே போதும். உங்கள் கடன் எல்லாம் காணாமல் போய்விடும். கஷ்டங்கள் எல்லாம் 21 நாட்களில் நிவர்த்தி ஆகும். வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறுங்கள்.