- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசொந்த வீடு கட்ட செய்ய வேண்டிய தானம்

சொந்த வீடு கட்ட செய்ய வேண்டிய தானம்

- Advertisement -

எலி வலையானாலும் தனி வலையே சிறந்தது என்ற பழமொழியை கேள்விப்பட்டு இருக்கிறோம். சிறு சிறு பூச்சிகள் முதற்கொண்டு தங்களுடைய குடும்பத்தை உருவாக்குவதற்கு முதலில் தனக்கென்று சொந்தமாக ஒரு கூட்டை கட்டிய பிறகு தான் முட்டையிட்டு குட்டிகளை வளர்க்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நாம் தான் நமக்கென்று சொந்தமாக ஒரு வீடு இல்லாமல் பிறருடைய வீட்டில் வாடகைக்காக குடியேறி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இன்னும் சிலருக்கு இதனால் திருமணம் ஆகாத சூழ்நிலை கூட உண்டாகிறது. இவை அனைத்துமே சொந்தமாக ஒரு வீடு இல்லை என்பதற்கு உரிய காரண கர்த்தாவாகவே திகழ்கிறது. இதற்காக பலரும் பல வழிகளில் போராடினாலும் தெய்வத்தின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே அவர்களால் சொந்த வீடு கட்ட முடியும். அப்படி சொந்த வீடு கட்டுவதற்கு கோவிலில் எந்த பொருளை தானமாக தரவேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சொந்தமாக இடம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், குடியேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு செவ்வாய் பகவானின் அருள் என்பது வேண்டும். இவர் கடனுக்கு மட்டும் காரண கர்த்தாவாக திகழவில்லை. நிலம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் காரண கர்த்தாவாக திகழ்கிறார். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் செவ்வாய் பகவானின் அருளால் விரைவிலேயே சொந்த வீடு கட்ட முடியும்.

- Advertisement -

இதோடு செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையான முருகப்பெருமான வழிபாடு செய்வதன் மூலம் நம்மால் சொந்தமாக வீடு வாங்க முடியும். இதையும் தவிர்த்து நம்முடைய கர்ம வினைகளை நீக்கி நன்மைகளை பெறுவதற்கு தான தர்மங்களை நாம் செய்ய வேண்டும். அப்படி வீடு கட்டுவதற்கு செய்யக்கூடிய ஒரு தானத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

இந்த தானத்தை திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை இந்த இரண்டு கிழமைகளில் ஏதாவது ஒரு கிழமையில் தான் செய்ய வேண்டும். முடிந்தவர்கள் செவ்வாய்க்கிழமையில் செய்வது என்பது மிகவும் நல்லது. நாம் ஜல்லியை தானமாக தர வேண்டும். வீடு கட்டும் பொழுது கான்கிரீட் போடுவதற்காக கருங்கல் ஜல்லி உபயோகப்படுத்துவோம் அல்லவா? அதை சிமெண்ட் விற்கும் கடைகளுக்கு சென்று ஒரு கிலோ மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

யார் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள்தான் அவர்கள் கைப்பட பணத்தை கொடுத்து இதை வாங்க வேண்டும். வாங்கியதும் நேராக அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு செல்ல வேண்டும். முடிந்த அளவிற்கு பழங்கால ஆலயமாக பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த ஆலயத்திற்கு சென்று அங்கு நுழையும் பொழுதே கொடிமரம் இருக்கும். அந்த கொடி மரத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

பிறகு அந்த கொடி மரத்திலிருந்து ஆலயத்தை ஒருமுறை அடி பிரதக்ஷணம் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு முறை சுற்றி வந்த பிறகு சாதாரணமாக மூன்று முறை கோவிலை வலம் வந்து இந்த ஜல்லியை கோவிலில் தானமாக தந்து விட வேண்டும். இப்படி தந்துவிட்டு அந்த கோவிலில் இருக்கக்கூடிய தெய்வத்தை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். இப்படி நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய சொந்த வீடு கட்டும் கனவு என்பது நிறைவாகும். வாடகை வீட்டிற்கு டாட்டா சொல்லிவிட்டு சொந்த வீட்டிற்கு குடியேறலாம்.

இதையும் படிக்கலாமே:பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க வழிபாடு
உப்பு தின்றவன் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவது போல யார் ஒருவர் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அவர்கள் அவர்களுடைய கைப்பட இந்த தானத்தை செய்வதன் மூலம் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேறும் யோகத்தை பெறுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்