
கலங்கமற்ற பிரகாசமான முகத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட முகத்தை பெற வேண்டும் என்று தான் பெண்களும் ஆண்களும் ஆசைப்படுகிறார்கள். அந்த முகத்தை பெறுவதற்கு வீட்டிலேயே நாம் எந்த முறையில் கிரீம் தயார் செய்ய வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
இந்த கிரீமை ஆண்களும் பெண்களும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக கலங்கமற்ற பிரகாசமான முகம் என்றால் அந்த முகத்தில் பருகளோ, கரும்புள்ளிகளோ, வடுக்கலோ, கருவளையங்களோ எதுவும் இல்லாமல் பளிச்சென்று இருக்க வேண்டும். அப்படிப்பட்ட முகத்தை பெற முடியுமா என்று பலரும் ஆச்சரியமாக கேட்பார்கள் இந்த ஒரு கிரீமை உபயோகப்படுத்தினால் கண்டிப்பான முறையில் நம்மால் அந்த முகத்தை பெற முடியும்.
இந்த கிரீமை தயார் செய்வதற்கு நமக்கு சீரகமும் வெந்தயமும் தேவைப்படும். ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் வெந்தயம் இவை இரண்டையும் முதல் நாள் இரவே நன்றாக கழுவி சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும். அதிக அளவு தண்ணீர் ஊற்ற வேண்டாம். மறுநாள் காலையில் எழுந்து ஒரு மிக்ஸி ஜாரில் இவை இரண்டையும் போட்டு நாம் ஊறவைத்த தண்ணீரை ஊற்றி நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். சக்கையை நாம் ஸ்க்ரப்பராக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சாரை வைத்து தான் நாம் இப்பொழுது கிரீம் தயார் செய்யப் போகிறோம். ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை செல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பின்ச் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு விட்டமின் இ கேப்ஸ்யூல் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் இந்த சாரை சிறிது சிறிதாக அதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு கலக்கும் பொழுது அது ஒரு வித பேஸ்ட் பதத்திற்கு வரும். இப்பொழுது இதை ஒரு ஏர்டைட் கண்டைனரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் வைத்தால் விரைவிலேயே கெட்டுவிடும். அதனால் ஃப்ரிட்ஜில் வைத்து ஐந்து நாட்கள் வரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இரவு நாம் படுக்க செல்வதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி விட்டு இந்த கிரீமை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்துவிட்டு தூங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து கழுவிக் கொள்ளலாம். இவ்வாறு தினமும் பயன்படுத்தி வர ஒரு வாரத்திலேயே முகத்தில் நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.
இதையும் படிக்கலாமே: கொத்து கொத்தாக கொட்டும் தலை முடியை 7 நாட்களில் கட்டு கட்டாக வளர வைக்க இந்த இரண்டு பொருள் போதும்.
இதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களுமே நம் முகத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்களாக இருப்பதால் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி முகம் எந்தவித கலங்கமும் இல்லாமல் பிரகாசத்துடனும் பொலிவுடன் திகழும்.