கொத்து கொத்தாக கொட்டும் தலை முடியை 7 நாட்களில் கட்டு கட்டாக வளர வைக்க இந்த இரண்டு பொருள் போதும்.

hair2
- Advertisement -

தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவாக இருந்து விட்டால் நம்முடைய தலைமுடி அடர்த்தியை யார் நினைத்தாலும் குறைக்க முடியாது. அதாவது உப்பு தண்ணீர், தூசி தும்பு, இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உங்களுடைய தலைமுடியின் வேர்க்கால்களை வலுவிழக்கச் செய்யும. உங்களுடைய முடியும் இன்றைய சூழ்நிலையில் நிறைய கொட்ட தொடங்கி விட்டதா.

அதை சரி செய்ய வீட்டில் இருந்தபடியே பின்பற்ற வேண்டிய அழகு குறிப்பு என்னென்ன என்பதை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். இரண்டு வகையான அழகு குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது இந்த இரண்டில் நீங்கள் ஏதாவது ஒன்றை பின்பற்றினாலும் சரி அல்லது வாரத்தில் ஒரு குறிப்பு என்று இரண்டு குறிப்புகளையும் பின்பற்றினாலும் சரி உங்களுடைய தலைமுடி கட்டு கட்டாக காடு போல வளர தொடங்கி விடும்.

- Advertisement -

முடியின் வேர்க்கால்களை வலுப்பெற செய்யும் ஆயில் மசாஜ்

ஒரு சுத்தமான கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், எடுத்துக் கொள்ளவும். இதில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். இதோடு 2 விட்டமின் இ கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜல்லை ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். இப்போது இதை டபுள் பாய்லிங் மெதடில் சூடு செய்ய வேண்டும்.

அடுப்பில் ஒரு பழைய பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி அந்த தண்ணீர் சூடானதும், இந்த எண்ணெயை கிண்ணத்தை அந்த சுடு தண்ணீர் வைத்து சூடு செய்யவும். எண்ணெய் டபுள் பாய்லிங் மெத்தடில் கை பொறுக்கும் அளவு சூடு வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எண்ணெயை வெதுவெதுப்பாக இருக்கும்போதே எடுத்து உங்களுடைய தலையின் வேர்க்கால்களில் படும்படி அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

- Advertisement -

முடியின் நுனி வரை இந்த எண்ணெயை தடவிக் கொள்ளலாம். பிறகு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியும் என்றால் ஒரு இரவு முழுதும் கூட தலையில் இந்த எண்ணெயை வைத்து மறுநாள் காலை எழுந்து தலைக்கு குளிக்கலாம். மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.

தொடர்ந்து ஏழு நாட்கள் இந்த எண்ணெயில் தலையை மசாய் செய்து வந்தால், தலைமுடியில் வேர்கால்கள் வலுப்பெற்று உடனடியாக முடி உதிர்வு குறைந்துவிடும். முடியின் அடர்த்தியும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் ஏழு நாட்கள் தொடர்ந்து இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றிய பிறகு வாரத்தில் இரண்டு நாட்கள் என்று இதே போல இந்த அழகு குறிப்பு பின்பற்றி வந்தாலே முடி ஆரோக்கியமாக வளரும்.

- Advertisement -

முடியின் வேர்க்கால்களை வலுப்பெறச் செய்ய இரண்டாவது ஒரு அழகு குறிப்பு

இதற்கு நமக்கு தேவையான பொருள் ரோஸ்மேரி இலை. வெந்தயம். இரண்டு பொருட்கள்தான். ரோஸ்மேரி இலை பச்சையாக கிடைத்தாலும் பயன்படுத்தலாம். ட்ரையாக ஆன்லைனில் கிடைக்கிறது அதை வாங்கியும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி நன்றாக சூடு செய்யுங்கள்.

அந்த தண்ணீர் சூடானதும் 2 ஸ்பூன் ரோஸ்மேரி இலை, 1 ஸ்பூன் வெந்தயம் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். அந்த இலையும் வெந்தயமும் தண்ணீரில் வெந்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, இதை வடிகட்டி ஆறவைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இதை வேர்க்கால்களில் படும்படி தலையில் ஸ்பிரே செய்து உங்கள் விரல்களால் லேசாக மசாஜ் செய்து கொடுக்கவும்.

இதையும் படிக்கலாமே: முகம் ஒரே நாளில் பளபளப்பாக மாற இதை ஒரு முறை போட்டாலே போதும்.

15 நிமிடம் கழித்து ஃபேன் காற்றிலேயே முடியை காய வைத்துக் கொள்ளுங்கள். தலைக்கு குளிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. இதை செய்தால் தூங்கும் போது கூட உங்களுடைய தலைமுடி வளர்ந்து கொண்டே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த அழகு குறிப்பை தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம். இந்த இரண்டு அழகு குறிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் பின்பற்றி பாருங்கள் நிச்சயமாக ஒரு சில நாட்களில் முடி உதிர்வு குறைந்து முடி வளர்வதை பார்க்க முடியும்.

- Advertisement -