- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவருடைய குணாதிசயங்கள் பழக்க வழக்கங்கள் வாழ்க்கை முறை போன்றவற்றை எல்லாம் கணிப்பது அவருடைய ராசியை அடிப்படையாகக் கொண்டு தான். அதே போல் அந்த ராசிக்குரிய கிரகத்தின் தன்மைக்கேற்ப மாற்றங்கள் ஏற்படும். அதே போல் லக்னத்திற்கு ஏற்ப ஒரு சில மாற்றங்கள் ஏற்படும். இவை அனைத்திற்குமே மூலாதாரமாக விளங்குவது பிறந்த நேரம் தான். ஏனெனில் உங்களுடைய பிறந்த நேரத்தை வைத்து தான் ராசியே கணக்கிடப்படுகிறது.

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிறந்த நேரத்தை வைத்தும் ஒருவருடைய எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்பதை கணிக்க முடியும் என்று ஜோதிடம் சொல்கிறது. நீங்கள் பிறந்த நேரத்தை வைத்து உங்களை கணிப்பதுடன் உங்களுடைய குணாதிசயங்களையும் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகவல் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கலாம். அதை குறித்த தகவலை இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

- Advertisement -

காலையில் பிறந்தவர்களுக்கான குணாதிசயங்கள்

காலை நேரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அதிக ஆற்றலும் உற்சாகமும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு செயலையும் ஆக்கபூர்வமாகவும் நம்பிக்கையாகவும் செய்வார்கள். அவர்கள் ஒரு குறிக்கோளுடன் வாழ்க்கையை நகர்த்துவார்கள். இயற்கையாகவே இவர்கள் செல்வந்தர்களாக வாழக் கூடிய தன்மையை பெற்றவர்கள். இவர்களின் இந்த நம்பிக்கையும் முயற்சியும் அவர்கள் வாழ்க்கையில் நினைத்த இலக்கை அடைய உதவி செய்யும்.

காலை நேரத்தில் பிறந்தவர்கள் கவர்ச்சியான தோற்றம் உடையவர்களாகவும் சிறந்த தலைவர்களாகவும் விளங்க கூடியவர்கள். தன்னை சுற்றியுள்ளவர்கள் முன்னேற்றத்திற்கு உதவுவதுடன் அவர்களும் முன்னேற வழி வகுத்துக் கொள்வார்கள். காலையில் பிறந்தவர்கள் சூரிய ஒளியுடன் தொடர்புடையவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் அவர்கள் எப்பொழுதுமே வாழ்க்கையை நேர்மறையான கண்ணோட்டத்துடனும் சவால்களுடன் எதிர் கொள்கிறார்கள். இதனால் இவர்கள் வாழ்க்கை எப்பொழுதும் பிரகாசத்துடன் மிளிரும்.

- Advertisement -

மாலை நேரத்தில் பிறந்தவர்களுக்கான குணாதிசயங்கள்

மாலை நேரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் படைப்பாற்றல் நிரம்பியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு உள்ளுணர்வு திறன் அதிகமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக ஊற்று நோக்கி நல்ல ஞானத்துடன் சிந்தித்து திறனாக செயல்படுவார்கள். இவர்கள் பிரச்சனைகளை நோக்கும் விதமும் தீர்க்கும் விதமும் மற்றவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கும்.

மாலை நேரம் பிறந்தவர்கள் ரகசியங்களை அதிக அளவில் பாதுகாப்பார்கள். கவர்ச்சியாக இருப்பார்கள். இதனால் மற்றவர்களை ஈர்க்கும் வசீகரத் தன்மை இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். இவர்களைப் பற்றி மற்றவர்கள் சிந்தித்துக் கொண்டே இருக்கும் படி இவர்களுடைய செயல்கள் இருக்கும். இவர்கள் பெரும்பாலும் கற்பனைத் திறன் அதிக கொண்டவர்கள. ஆகையால் எழுத்து ஓவியம் இசை போன்ற கலை துறைகளில் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே: கார்த்திகையில் வெற்றி வாய்ப்பை பெறப் போகும் ராசிகள்

ஒருவருடைய பிறந்த நேரத்தை வைத்து அவருடைய ராசி கணக்கிடப்படும். அதை வைத்து மற்ற குறிப்புகளும் ஜாதகத்தில் கணக்கிடப்படும். ஒரே ராசியில் பிறந்த இருவர் காலை மாலை என நேரம் மாறுபடும் போது அவர்களுக்கான குணாதிசயங்கள் பலதும் மாறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பதிவில் உள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடத்தில் உள்ள பொதுவான கருத்துக்களில் அடிப்படையில் அமைந்தவை தான். இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் பயன்படுத்தி பலன் அடையலாம்.

- Advertisement -