கார்த்திகையில் வெற்றி வாய்ப்பை பெறப் போகும் ராசிகள்

dheepam jathagam
- Advertisement -

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கென தனி சிறப்புகள் இருந்தாலும் கார்த்திகை மாதம் வெகு விசேஷமான மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் அதிபதியானவர் சூரியன். இவர் விருச்சக ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் ஆகும். மேலும் இந்த மாதத்தில் சூரியன் புதன் செவ்வாய் ஆகிய கிரகங்களில் சேர்க்கையால் சில ராசிகள் மிகுந்த நற்பலனை அனுபவிக்க போகின்றன. அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பற்றி இந்த ஜோதிடம் குறித்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்

சூரியனுடன் புதன் சேர்ந்து இருப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கார்த்திகை மாதம் பல நற்பலன்களை தருவதாக உள்ளது. இந்த மாதத்தில் இவர்களுக்கு உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி நல்ல இணக்கம் உண்டாகும். இந்த மாதத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். வேலைக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை குடும்பத்திற்கும் கொடுத்தால் இரண்டிலும் சந்தோஷமான மனநிலையை அனுபவிக்கலாம். பொருளாதார நல்ல நிலையில் இருக்கும்.

- Advertisement -

கன்னி

இந்த ராசிக்காரர்களுக்கு தைரிய ஸ்தனத்தில் சூரியன், புதன் இருவரின் சஞ்சாரமும் இருக்கிறது. ஆகையால் இந்த காலக்கட்டத்தில் இல்வாழ்க்கையில் உங்களின் துணைகள் பக்கபலமாக இருப்பார்கள். வீண் ஆடம்பர செலவுகள் உருவாகும் கவனமாக இருங்கள். எதற்கும் அதிகமாக உணர்ச்சி வசப்படும் நீங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி செயல்பட்டால் இந்த மாதம் வெற்றி அடையக் கூடிய மாதமாக மாறும்.

விருச்சகம்

விருச்சக ராசியில் புதன் சூரியன் இணைவால் புதாத்திய யோகம் உண்டாகிறது. செவ்வாயும் இந்த ராசியில் இருக்கும் காரணத்தினால் குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இதுவரை இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணியிடத்தில் இருந்த குழப்பங்களும் தீர்ந்து அனைத்தும் சமூகமாக முடியும் காலம் இது. திட்டமிட்டு செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி அடைய கூடிய அற்புதமான மாதம்.

- Advertisement -

மகரம்

இந்த ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சியினால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உறவுகளிடையே இது வரை இருந்த பிணக்குகள் மறையும். பணியிடத்தில் உங்களுக்கு இதுவரை கிடைக்காத அங்கீகாரம் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். உடன்பிறந்தோர்களை அனுசரித்து செல்வது இந்த மாதத்தில் மேலும் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுக்கும்.

கும்பம்

கும்ப ராசியில் சூரியன் சஞ்சாரத்தால் வேலை செய்யும் இடத்தில் பல நல்வாய்ப்புகள் கிடைக்க உள்ளது. உடன் பணியாற்றுபவர்கள் நண்பர்கள் உங்களுக்கு இதுவரை தராத உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தருவார்கள். பெண்களின் ஆதரவு கும்ப ராசியினருக்கு எப்போதும் உண்டு. அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஏனெனில் இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதும் இதனால் பிரச்சனைகளும் வருவதுண்டு. இதை சரியான முறையில் கையாண்டால் இந்த மாதம் உங்களுக்கு அமோகமான மாதமாக அமையும்.

இதையும் படிக்கலாமே: சூரியனின் பார்வையால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

மேற்கூறிய இந்த ராசிக்காரர்களுக்கு கார்த்திகை மாதத்தில் பெறக் கூடிய பலன்களைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொண்டிருப்பீர்கள். இது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துகளின் படி கணிக்கப்பட்டவையாகும். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பயன்படுத்தி பலன் அடையலாம்.

- Advertisement -