- Advertisement -
சமையல் குறிப்புகள்

இந்த 2 பொருள் உங்க வீட்ல இருக்குதா! அப்படினா இந்த பிரேக் ஃபாஸ்ட்ட டக்குனு 10 நிமிஷத்துல செஞ்சிடலாமே!

ஆமாங்க! வெறும் உருளைக்கிழங்கு, கோதுமை மாவும் மட்டும் இருந்தாலே புது விதமான இந்த தோசையை உங்களுடைய வீட்டில் செய்து விடலாம். இதை தோசையாக அப்படியேவும் சாப்பிடலாம் குழந்தைகளுக்கு, இந்த தோசைக்கு உள்பக்கத்தில் டொமெட்டோ சாஸ் தடவி, ரோல் மாதிரி சுருட்டியும் உங்க குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அது உங்களுடைய விருப்பம் தான். காலையில் இட்லி தோசைக்கு மாவு இல்லைன்னா என்ன செய்வது, என்று குழம்பும் போது டக்குனு பத்தே நிமிஷத்துல செஞ்சுட்டு போயிட்டே இருக்கலாம் பாருங்க!

Step 1:
முதலில் 500 கிராம் அளவு உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டாம். நன்றாக கழுவிவிட்டு, தோல் சீவிவிட்டு, சின்ன சின்னதாக வெட்டி, மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். பச்சை உருளைக் கிழங்கை கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, விழுது போல நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பச்சை உருளைக் கிழங்கை அரைத்தால் கொஞ்சம் நிறம் மாறத்தான் செய்யும், பரவாயில்லை.

- Advertisement -

Step 2:
அடுத்தபடியாக ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த உருளைக்கிழங்கை ஊற்றிக் கொள்ளுங்கள். இதோடு கோதுமை மாவு 1/2 கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிதளவு, மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, சில்லி ஃப்ளேக்ஸ் அல்லது மிளகாய் தூள் – 1 ஸ்பூன், இவைகளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு இந்த மாவை கரைத்துக் கொள்ள வேண்டும்.

மாவை ரொம்ப கட்டி பதத்தில் கரைத்து விடாதீர்கள். ரொம்பவும் தன்னியாகவும் கரைத்து விடாதீர்கள். ஊத்தப்பம் ஊத்துவதற்கு, வெங்காயம் போட்டு தாளித்து, மாவை எப்படி தயார் செய்வீர்களோ அது போலவே, இந்த மாவை தயாரித்துக்கொள்ளுங்கள். சரியாக சொல்லப்போனால் பஜ்ஜி மாவு பதத்திற்கு தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

Step 3:
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து விட்டு, அதில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி தேய்த்து, அதன் பின்பு இந்த மாவை, தோசை போல ஊற்றி தேக்க முடியாது. மாவை ஒரு கரண்டியில் எடுத்து பரவலாக ஊற்றி ஸ்பிரெட் செய்துவிடுங்கள். தோசைக்கு மேலே ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு, சிவந்த பின்பு மேலே சாஸ் தடவி, ரோல் மாதிரி சுருட்டி கொடுத்தாலும் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும். அல்லது உங்களுக்கு விருப்பமான சட்னியை சைட் டிஷ்ஷாக வைத்த அப்படியேவும் சாப்பிடலாம்.

இந்த தோசை மாவில் கேரட், முட்டைகோஸ், குடைமிளகாய், பன்னீர், காளான் போன்ற உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்தும் சுடலாம். அது உங்களுடைய விருப்பம் தான். ஆனால், இந்த பச்சை உருளைக்கிழங்கு விழுதும், கோதுமை மாவும் சேரும்போது புதுவிதமான சுவை உங்களுக்கு கிடைக்கும் உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்க வீட்லயும் ஒரு வாட்டி ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
அட, கோதுமை மாவை வைத்து கூட அதிரசம் செய்யலாமா? அதுவும் 10 நிமிஷத்தில! சொதப்பாம தீபாவளிக்கு, அதிரசம் சுடணும்னா, இப்ப ஒரு சின்ன ட்ரையல் பார்த்திடலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -