அட, கோதுமை மாவை வைத்து கூட அதிரசம் செய்யலாமா? அதுவும் 10 நிமிஷத்தில! சொதப்பாம தீபாவளிக்கு, அதிரசம் சுடணும்னா, இப்ப ஒரு சின்ன ட்ரையல் பார்த்திடலாம்.

adhirasam9
- Advertisement -

பொதுவாகவே அதிரசம் செய்வது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். அரிசி வாங்கி கழுவி அரைத்து, அதன் பின்பு பக்குவமாக பாகு காய்ச்சி, அதிரசம் செய்ய கொஞ்சம் பயம் உள்ளவர்கள், சமையலில் இப்போதுதான் காலை எடுத்து வைப்பவர்கள், இந்த அதிரசத்தை கொஞ்சம் கூட பயம் இல்லாமல், சுடலாம். கட்டாயம் சரியான பக்குவத்தில் அதிரசம் வரும். தீபாவளிக்கு இந்த அதிரசத்தை செய்து உங்க சொந்தக்காரங்க எல்லோருக்கும் கொடுங்கள். அதுக்கு முன்னாடி இன்னைக்கு கொஞ்சமா ஒரு 10 அதிரசத்தை செய்து ட்ரையல் பார்த்திடலாம்.

adhirasam2

Step 1:
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 1/2 கப் அளவு கோதுமை மாவு, 1/2 கப் அளவு அரிசி மாவை சேர்த்து, ஒரு கரண்டி வைத்து நன்றாக இரண்டு மாவையும் கலந்து விட்டு விடுங்கள். இந்த மாவு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

Step 2:
1 – கப் அளவு பாகு வெல்லம் எடுத்து, நன்றாக தூள் செய்து, வைத்துக்கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்திருக்கும் 1 கப் அளவு வெல்லத்தை, சேர்த்து நன்றாக கரைத்து வடிகட்டுங்கள். வெல்லத்தில் கட்டாயம் தூசி இருக்கும். (வெல்லம், அரிசி மாவு, கோதுமை மாவு, தண்ணீர், எல்லாவற்றையும் ஒரே கப்பில் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்.)

adhirasam4

வடிகட்டிய இந்த வெல்லத்தை மீண்டும் அதே கடாயில் ஊற்றி, நன்றாக கொதிக்க விடுங்கள். 5 நிமிடங்கள் கொதித்ததும் அதை லேசாக தொட்டு பார்த்தால், பிசு பிசு தன்மை வந்திருக்கும். அந்த சமயத்தில் அரிசி மாவையும் கோதுமை மாவையும் கலந்து வைத்திருக்கின்றோம் அல்லவா, அதை எடுத்து வெல்லக் கரைசலில் கொட்டி, கட்டி படாமல் கலந்துவிட வேண்டும். வெல்லமும், மாவும் நன்றாக சேர்ந்து கெட்டிப் பதத்துக்கு கடாயில் ஒட்டாமல் வரும். (மாவை வெல்லப்பாகில் கொட்டும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்து விட வேண்டும்.)

- Advertisement -

இறுதியாக நெய் வாசம் பிடிப்பவர்கள், நெய் ஒரு ஸ்பூன்  விட்டு, மாவை நன்றாக கலந்து விட்டு, அடுப்பிலிருந்து கீழே இறக்கிக் கொள்ளலாம். நெய் வாசம் பிடிக்க வில்லை என்றால், ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மாவை நன்றாக கலந்துவிட்டு, கெட்டிப் பதத்தில் இருக்கும் மாவை எடுத்து தனியாக பாத்திரத்தில் வைத்து நன்றாக ஆற விட்டு விடுங்கள்.

adhirasam6

Step 3:
இப்போது உங்களுக்கு அதிரசம் மாவு சூப்பராக கிடைத்திருக்கும். ஆரிய இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். கையில் கொஞ்சம் எண்ணெய் தொட்டுக் கொள்ளுங்கள். 10 லிருந்து 12 உருண்டைகள் கிடைக்கும். இந்த அதிரச உருண்டைகளை, வாழை இலையிலோ அல்லது கவரிலோ, கொஞ்சம் எண்ணெய் தடவி, வட்ட வடிவத்தில் தட்டி, எண்ணெயில் விட்டு ஒவ்வொன்றாக பொரித்து எடுத்து, இரண்டு கரண்டிகளை ஒன்றாக வைத்து எண்ணெயை பிழிந்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

adhirasam8

எண்ணெயை சூடாக்கி விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, அதிரசத்தை எண்ணை சட்டியில் போடுங்கள். இல்லை என்றால் மேலே அதிரசம் கருகிவிடும். உள்ளே வேகாதது போல இருக்கும். இந்த அதிரசத்தை கோதுமை மாவை வைத்து செய்தீர்கள் என்பதை கட்டாயம் யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவிற்கு இதன் சுவையும் பக்குவமும் வரும். ஒரே ஒரு வாட்டி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
ரோஜா செடியில் பூக்கள் உதிராமல் கொத்துக்கொத்தாக பூக்க நீங்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் இந்த 1 பொருள் போதுமே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -