- Advertisement -
- Advertisement -

நாளைய தினம் நிறைந்த தை மாத பௌர்ணமி. தை மாதத்தில் ஒரு நாள் கூட நீங்கள் அம்பாள் கோவிலுக்கு செல்லவில்லை. உங்கள் ஊர் மாரியம்மன் கோவிலுக்கு செல்லவில்லை, உங்கள் ஊர் எல்லை தெய்வத்தை காண செல்லவில்லை என்றால், நாளைய தினம் கட்டாயமாக அந்த கோவிலுக்கு சென்று குடும்ப நலனுக்காக சின்னதாக ஒரு பிரார்த்தனை செய்யுங்கள். தேங்காய் உடைத்து உங்கள் குடும்ப பெயர்களை எல்லாம் சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்.

இந்த வழிபாடு இந்த வருடம் முழுவதும் உங்களுடைய குடும்பத்திற்கு சுபிட்சத்தை கொடுக்கும். முடிந்தவர்கள் வாய்ப்பு இருக்கிறது என்பவர்கள் குலதெய்வ வழிபாட்டையும் நாளைய தினம் செய்யலாம். குலதெய்வத்தின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கத் துவங்கும். நாளை அவ்வளவு அதி அற்புதமான நாள். அம்பாள் வழிபாடு செய்ய யாரும் தவறவே கூடாது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் நாளைய தினம் அம்பாள் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

அம்பாளின் அருள் ஆசி கிடைக்க, தாயாரின் அருள் ஆசி கிடைக்க, மகாலட்சுமியின் அருளாசி கிடைக்க, சிவன் விஷ்ணுவின் அருளாசி கிடைத்த நாம் செய்ய வேண்டிய எளிமையான ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தையும், ஒரு மந்திரத்தையும் தான் இன்று இப்போது இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பிப்ரவரி 12ஆம் தேதி தை 30ஆம் தேதி நாளைய தினம் பௌர்ணமி திதி.

நாளை மாலை நிலவு உதயமாகும் சமயத்தில், நீங்கள் அம்மன் கோவிலில் அமர்ந்து கொண்டு மகாலட்சுமியை மனம் உருகி பிரார்த்தனை செய்து, இந்த மந்திரத்தை படிக்க வேண்டும். அவ்வளவுதான். பணப்பிரச்சனை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். கடன் சுமையெல்லாம் குறையும். வீட்டில் வருமானம் பல மடங்கு பெருகும். நம் எல்லோருமே சாமி கும்பிடுவது குடும்ப நலனுக்காக தான். அதிலும் குறிப்பாக பண பிரச்சனைக்காக தானே. அதை சரி செய்யத்தான் இந்த மந்திரமும் இந்த வழிபாடும்.

- Advertisement -

தாயார் மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம்
விஷ்ணு பத்னீயை, மகாலக்ஷ்மியை
கமல தாரிண்யை, சிம்ம வாஹின்யை ஸ்வாஹா

வில்வப்ரியாயை நமஹ!
சிவ சகோதரியை நமஹ!

இதையும் படிக்கலாமே: தை பௌர்ணமி பரிகாரம்

விஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி தாயார், சிவபெருமானின் சகோதரியின் மகாலட்சுமி தாயாரையும் நினைத்து அம்பாள் கோவிலில் இந்த மந்திரத்தை சொல்பவர் வாழ்வில் நிச்சயம் கஷ்டமே வராது. அனைத்து தெய்வத்தின் பரிபூரண ஆசையும் உங்களுக்கு கிடைத்துவிடும். இது ஒரு எளிமையான மந்திரம். அதிலும் பௌர்ணமி நாளில் இந்த மந்திரத்தை உச்சரிப்பது அதிக அற்புதம் வாய்ந்த பலனை தரும். கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் பௌர்ணமி நிலவைப் பார்த்த படியும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -