- Advertisement -
- Advertisement -

வியாழக்கிழமை என்றால் அது குபேர பகவானுக்கும் குரு பகவானுக்கும் உகந்த கிழமையாக திகழும். நம்முடைய ஜாதகத்தில் குருபகவான் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை பொறுத்துதான் நம்முடைய வாழ்க்கையே அமையும் என்று கூறப்படுகிறது. எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் ஜாதகத்தில் குரு பகவான் எங்கு இருக்கிறார்? யாரை பார்க்கிறார் என்பதை பொறுத்துதான் அந்த காரியத்தில் வெற்றி நிகழுமா? நிகழாதா? என்று கூறுவார்கள். மேலும் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவதையும் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அந்த வகையில் குரு பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மங்களகரமான வாழ்க்கை வாழ்வதற்கு வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷ நாள் அன்று சிவபெருமானை நினைத்து ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம்முடைய கர்ம வினைகளையும் தோஷங்களையும் நீக்கக்கூடிய நாளாக தான் பிரதோஷ நாள் திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் நம்முடைய துயரங்கள் அனைத்தையும் நீக்கி மங்களங்களை சேர்ப்பதற்குரிய ஒரு எளிமையான தீப வழிபாட்டு முறை ஒன்று இருக்கிறது. இந்த முறையை வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷ நாளில் செய்வதன் மூலம் நம்முடைய துயரங்கள் முற்றிலும் நீங்குவதோடு நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான மங்களங்களும் உண்டாகும்.

- Advertisement -

இந்த தீபத்தை மாலை நேரத்தில் வரக்கூடிய பிரதோஷ நேரமான நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் ஏற்ற வேண்டும். இதற்கு ஒரு தட்டு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் சிறிது விபூதியை கொட்டி பரப்பிக் கொள்ளுங்கள். அந்த தட்டிற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய மோதிர விரலால் அந்த விபூதியில் ஓம் என்று எழுத வேண்டும். அதற்கு மேல் வில்வ இலைகளை வைத்து அந்த வில்வ இலைக்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.

பிறகு சுத்தமான மஞ்சள் தூளை கையில் வைத்து அதில் சிறிதளவு மட்டும் பன்னீரை ஊற்றி கெட்டியாக உருண்டை போல பிடித்துக் கொள்ளுங்கள். சிறிய உருண்டையாக இருந்தால் போதும். இந்த உருண்டையை எரிகின்ற தீபத்திற்குள் போட வேண்டும். பிறகு அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து “ஓம் நமோ பகவதே ருத்ராய” என்னும் மந்திரத்தையும் “ஓம் ஐஸ்வரேஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தையும் 21 முறை பாராயணம் செய்ய வேண்டும். இப்படி நாம் பிரதோஷ நேரத்தில் மஞ்சள் உருண்டையை பிடித்து போட்டு தீபம் ஏற்றுவதன் மூலம் நம் வாழ்வில் இதுவரை நாம் பட்ட துயரங்கள் அனைத்தையும் சிவபெருமான் நீக்குவார்.

- Advertisement -

மேலும் ஐஸ்வரேஸ்வரரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் பெருகும். பிரதோஷ நேரமான நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணி என்பது குபேரருக்கும் உகந்த நேரமாகவே கருதப்படுகிறது. குபேரருக்கு செல்வத்தை வழங்கியவர் தான் ஐஸ்வரேஸ்வரர் என்பதால் அந்த நேரத்தில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமானின் அருளோடு குபேரரின் அருளும் குரு பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பண நெருக்கடி நீங்க ஏற்ற வேண்டிய தீபம்

முழு மனதோடு சிவபெருமானை நினைத்து இந்த ஒரு தீபத்தை வீட்டில் ஏற்றி வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்வில் பட்ட துயரங்கள் அனைத்தும் காணாமல் போவதோடு செல்வ செழிப்புடனும் குபேர சம்பத்துடனும் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -