- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

பிரச்சனைகள் தீர சப்பாத்தி கள்ளி பரிகாரம்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் கட்டாயமாக இருக்கும் ஆனால் அந்த பிரச்சனைகள் எப்படிப்பட்டது என்பது தான் முக்கியமானது. ஒரு சிலருக்கு எளிதில் கடந்து விடக் கூடிய பிரச்சனைகளாகவும், தீர்க்கக் கூடிய பிரச்சனைகளாகவும் இருக்கும். ஆனால் இன்னும் சிலருக்கோ வெளியில் யாரிடமும் சொல்ல கூட முடியாது அந்த அளவிற்கு பிரச்சனைகள் இருக்கும்

இப்படியானவர்களும் இந்த பிரச்சனைகளில் இருந்து வெளி வருவதற்கான வழிகளை தேடிக் கொண்டு தான் இருப்பார்கள். இவர்கள் யாரிடமும் உதவியும் கேட்க முடியாது தானாக எதையும் முடிவெடுக்க முடியாது. அப்படிப்பட்ட நேரத்தில் இந்த பரிகாரம் ஒரு நல்ல பலனை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பிரச்சனைகள் தீர சப்பாத்திக் கள்ளி பரிகாரம்

சில பரிகாரங்கள் சில தினங்களில் செய்யும் போது அதிக பலனை கொடுக்கும். அந்த வகையில் இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று செய்வது தான் சிறந்தது. இந்த பரிகாரத்திற்கு உங்கள் வீட்டின் அருகில் சப்பாத்தி கள்ளி செடி எங்கு இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதை அங்கு தான் செய்ய வேண்டும்.

செவ்வாய்க் கிழமை வேளையில் நீங்கள் சப்பாத்தி கள்ளி செடி இருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். அப்படி செல்லும் போது கையில் ஒரு மஞ்சள் நிற துணி, மஞ்சள் தூள், பச்சை கற்பூரம் , அகல் விளக்கு, பேனா இவற்றை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். முதலில் சப்பாத்திக் கள்ளி செடியில் நீங்கள் கொண்டு போன இந்த மஞ்சள் நிற துணியை கட்ட வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு சப்பாத்தி கள்ளி செடியின் இலையில் உங்களுக்கு என்ன பிரச்சனையோ யாரிடம் உங்களால் சொல்ல முடியவில்லையோ அப்பேர்ப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் அதில் பேனாவைக் கொண்டு எழுதுங்கள். அதன் பிறகு இந்த பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு கையில் இருக்கும் மஞ்சளை மூன்று முறை அந்த செடியின் மீது போடுங்கள்.

இவையெல்லாம் செய்த பிறகு அகல் விளக்கின் பச்சைக் கற்பூரத்தை முதலில் ஒரு துண்டு வையுங்கள். அதை எரிந்து முடியும் வரை உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று மனதார உருகி வேண்டிக் கொள்ளுங்கள். அந்த கற்பூரம் குளிர்ந்த பிறகு மீண்டும் ஒரு கற்பூரத்தை பற்ற வைத்து அதன் பிறகு வேண்டிக் கொள்ளுங்கள் இதே போல மூன்று முறை செய்ய வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு வீட்டிற்கு வந்து விடுங்கள். இந்த பரிகாரம் உங்களுடைய பிரச்சனைகளை விரைவில் தீர்த்து விடும் என்று சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் நாம் சப்பாத்திக் கள்ளியில் எழுதும் பழக்கங்களை பார்த்திருப்போம். அதில் எழுதும் பொழுது நம்முடைய பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றலை தரும் என்பது தான் அதன் தார்பரியம்.

இதையும் படிக்கலாமே: பர்ஸ் வைக்கும் முறை

இந்த பரிகார முறையில் ஒரு முறை செய்தாலே நல்ல பலன் கிடைக்கும். சில நேரங்களில் அவரவர் கர்மவினைக்கு ஏற்ப பரிகாரங்கள் பழிக்க தாமதமாகும். அப்படி இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து இதை செய்து வாருங்கள். நிச்சயம் உங்கள் பிரச்சனைகள் தீரும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -