- Advertisement -

பாம்பு என்றால் மனிதர்கள் எல்லோருக்குமே ஒரு வித பயம் ஏற்படுவது இயற்கை தான். பாம்பின் பற்களில் இருக்கும் விஷம் மனிதனை சுலபத்தில் கொல்ல கூடியதாகும். மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒன்பது கிரகங்களிலும் விஷப்பாம்பை போன்ற சக்தி கொண்ட ஒரு கிரகம் தான் “ராகு”. இந்த ராகு கிரகத்தால் ஏற்படும் “ராகு தோஷம்” எதனால் ஏற்படுகிறது, அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு காண்போம்.

ராகு பரிகாரம்

நவகிரகங்களில் சனி பகவானுக்கு நிகரான சக்தி கொண்டவர்தான் தான் ராகு பகவான். ராகு கிரகம் ஒரு நபரின் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருந்தாலும், ராகு கிரகத்தின் பாதகமான திசை நடந்தாலும் ராகு தோஷம் ஏற்படுகிறது. மேலும் நாக பாம்புகளை கொல்வது, அவற்றை துன்புறுத்துவது மற்றும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும் ராகு தோஷம் ஏற்படுகிறது.

- Advertisement -

இந்த ராகு தோஷம் பீடித்திருக்கும் நபர்களுக்கு சோம்பல்தனம் அதிகமாகும். குடும்பத்தினருடனும் பிறருடனும் அடிக்கடி சண்டையிடுவர். போதை பொருட்களை பயன்படுத்த தொடங்குவார்கள். சிலர் சமூக விரோத செயல்களிலும் ஈடுபடக்கூடும். எந்த ஒரு வேலையிலும் நிலைத்திருக்க மாட்டார்கள். தொழில், வியாபாரங்களில் நஷ்டம் ஏற்படும். கடன் சுமை அதிகமாகும். வயிறு சம்பந்தமான நோய்களால் அவதியுறுவர்.

ராகு கிரக தோஷத்தால் ஏற்படும் இப்பிரச்சினைகளை போக்க உங்கள் முன்னோர்களை தினந்தோறும் வழிபட்டு, உங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கான திதி வழிபாட்டை உரிய காலங்களில் மேற்கொள்ள வேண்டும். உங்கள் வீடுகளுக்கு உங்கள் பெயரை வைக்காமல் உங்கள் பெற்றோர்கள் அல்லது முன்னோர்களின் பெயர்களை பொறித்த பெயர்கற்களை வீட்டின் வெளிசுவற்றில் பதிக்க வேண்டும். வீட்டின் கிழக்கு பகுதியில் உண்பது, உறங்குவது போன்ற செயல்களை மேற்கொள்வது நன்மையை தரும்.

- Advertisement -

கோடைகாலங்களில் கோவில் விசேஷங்களில் பக்தர்களுக்கு இளநீர் தானமளிப்பது சிறந்த பரிகாரம் ஆகும். உங்களுக்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்வது சிறந்தது. திருநாகேஸ்வரம், காளஹஸ்தி போன்ற கோவில்களுக்கு செவ்வாய்க்கிழமைமைகளில் சென்று, ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பரிகார பூஜை செய்தால் ராகு தோஷத்தால் கெடுபலன்கள் அதிகம் ஏற்படாமல் தடுக்கும்.

இதையும் படிக்கலாமே:
கோவிலில் எந்த திரியில் தீபம் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
Here we have Rahu pariharam in Tamil or Rahu dosha pariharam Tamil. It is also called as Rahu dosha remedies in Tamil. Rahu dosham in Tamil or Raghu dosham neenga pariharam in Tamil is here.

- Advertisement -