- Advertisement -
சமையல் குறிப்புகள்

இனி காசு கொடுத்து கடையிலிருந்து கோதுமை மாவு வாங்க வேண்டாம். ரேஷன் கோதுமையே போதும். இந்த 2 பொருட்களை சேர்த்து ரேஷன் கோதுமையை அரைத்து பாருங்கள்.

கடையில் இருந்து காசு கொடுத்து வாங்கும் கோதுமை மாவை விட, ரேஷன் கடைகளில் கிடைக்கும் கோதுமையை வாங்கி மாவு அரைத்து வைத்துக் கொண்டாலே போதும். நமக்கு ஆரோக்கியமான, சுவையான, சாஃப்டான சப்பாத்தி, பூரி கிடைக்கும். ரேஷனிலிருந்து வாங்கிய கோதுமையை எப்படி சுத்தம் செய்து? எந்த பொருட்களை சேர்த்து அரைப்பது? என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 5 கிலோ அளவு கோதுமை மாவை அரைத்து வைத்தாலும், நீண்ட நாட்களுக்கு அந்த மாவு, கெட்டுப்போகாமல் இருப்பதற்கு சின்ன டிப்ஸ் உங்களுக்காக இந்த பதிவின் இறுதியில்.

5 கிலோ கோதுமை மாவை, ரேஷனிலிருந்து வாங்கி வந்தால், அதை முதலில் சல்லடையில் போட்டு சலித்து, அதில் இருக்கும் தூசிகளை நீக்கி விட வேண்டும். அதற்கு பின்பு, அதில் இருக்கும் குச்சிகள், கல் போன்ற தேவையற்ற குருனிகளை பொறுக்கி எடுத்து விட வேண்டும். அதன் பின்பாக சுத்தமான தண்ணீரில் போட்டு, 5 நிமிடங்கள் வரை ஊற வைத்து, கைகளை போட்டு நன்றாக நிமிடி அலசி கழுவவேண்டும். இரண்டிலிருந்து மூன்று முறை கோதுமையை நன்றாக கழுவி விட்டு, தண்ணீரை நன்றாக வடித்து, அதன் பின்பு ஒரு காட்டன் துணியின் மேல் கோதுமையை பரப்பி நன்றாக அடிக்கும் வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் ஈரப்பதம் இருந்தாலும் கோதுமை மாவு கட்டாயம் சீக்கிரமே கெட்டுப்போகும்.

- Advertisement -

5 கிலோ அளவு கோதுமை மாவுக்கு, 1/4 கிலோ அளவு வெள்ளை கொண்டைக்கடலை, 1/2 கிலோ அளவு வெள்ளை சோயாபீன்ஸ் தேவைப்படும். இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி அப்படியே வெயிலில் போட்டு நன்றாக காயவைத்து கோதுமை மாவோடு சேர்த்து ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். கேவுரு மாவு அரைத்தவுடன், கோதுமை மாவு போட்டு அரைக்கக் கூடாது என்பதையும் கடைக்காரரிடம் சொல்லிவிடுங்கள்.

அரைத்த இந்த மாவில் சூடு இருக்கும். சூட்டோடு மாவை மூடி எடுத்து வைக்கக்கூடாது. வியர்வை தண்ணீர் பட்டால், மாவு சீக்கிரம் கெட்டுப் போய்விடும். வீட்டிற்கு கொண்டு வந்து அந்த மாவை நன்றாக ஆற வைத்த பின்பு, மாவு சலிக்கும் சல்லடையில் போட்டு நன்றாக சலித்து எடுத்து விட வேண்டும். கோதுமை மாவை அரைத்து சளிக்கும் போது, தேவையற்ற தவிடு, நிறையவே இருக்கும். சளிக்கும் போது இந்த தவிடை நீக்கி விடுங்கள்.

- Advertisement -

ஒரு காய்ந்த சில்வர் டப்பாவில் இந்த மாவை கொட்டி, 4 லிருந்து 5 மிளகாய்களை, அதாவது காம்பு உடையாத வரமிளகாய் மிளகாய்களை மாவில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. கொஞ்சமாக தூள் உப்பு எடுத்து கடாயில் போட்டு வறுத்து, ஆற வைத்துக் கொள்ளவும். அந்த தூள் உப்பை மாவில் சேர்த்து நன்றாக கலந்து வைத்தாலும் கூட மாவு நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 5 கிலோ மாவிற்கு ஒரு ஸ்பூன் தூள் உப்பு போதும்.

ஒருவேளை மிளகாய் போடுவதால் உங்களுக்கு மாவில் நெடி வருவது போல இருந்தால், அந்த மிளகாயை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி கூட மாவில் போட்டு வைக்கலாம். மாவு நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும். இந்தப் பக்குவத்தில், அரைத்த மாவில் சப்பாத்தி பூரி செய்து பாருங்கள். நிச்சயம் ஆரோக்கியமான சப்பாத்தி இது.

- Advertisement -

இந்த மாவில் எந்தவிதமான செயற்கையான பொருளும் கலைக்கப்படவில்லை. கெட்டுப்போகாமல் இருப்பதற்கு கடைகளிலிருந்து வாங்கக்கூடிய மாவில் செயற்கை பிரசர்வெட்டிவ் கலக்கப்படுகிறது. அது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் தரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சனிக்கிழமையில் இந்த தோசை சாப்பிட்டால் நவகிரக தோஷம் நீங்குமாம்! அப்படி என்ன தோசை அது? நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -