சனிக்கிழமையில் இந்த தோசை சாப்பிட்டால் நவகிரக தோஷம் நீங்குமாம்! அப்படி என்ன தோசை அது? நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

navathaniya-dosai-nava-graham
- Advertisement -

நாம் செய்யும் ஒவ்வொரு தவறும், தர்மமும் சித்திரகுப்தரால் கணக்கு எழுதி வைக்கப்படும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இப்படி நீங்கள் செய்யும் தவறுகளும், நல்லவைகளும் கர்ம வினையாக இந்த ஜென்மத்திலும் அடுத்த அடுத்த பிறவிகளிலும் உங்களை பின் தொடர்வதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. கர்ம வினை என்பது இதைத் தான் குறிக்கிறது. கர்ம வினை என்றால் நாம் செய்த பாவங்கள் மட்டும் அல்ல. பாவமும், தர்மமும் இணைந்தது தான் கர்மம்.

chitra-gupta

நீங்கள் நல்லது செய்தாலும் நல்ல கர்ம வினை பயன்கள் உங்களை தொடரும். கெட்டது செய்தாலும் கெட்ட கர்ம வினை பயன்கள் உங்களை விடாமல் துரத்தும். இதற்காகவே ஒவ்வொரு மனிதனும் தினமும் ஓடிக் கொண்டிருக்கிறான். இதனை செய்ய ஒரு இயக்கமே வேலை செய்கிறது. அதைத் தான் நவ கிரகங்கள் என்று நாம் அழைக்கிறோம். நவகிரகங்களின் வேலை நம் கர்ம வினைப் பயன்களை நாம் சரியாக அனுபவிக்க செய்வது தான்.

- Advertisement -

இப்படி நாம் அனுபவிக்கும் கர்ம வினையில் கெட்ட கர்மவினை பயன்கள் நமக்கு துன்பத்தை தந்து கொண்டிருக்கும். நீங்கள் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு துன்பத்திற்கும் நீங்கள் செய்த பாவகர்ம வினைகள் காரணமாக அமைந்திருக்கும். சொர்க்கம், நரகம் என்பது நாம் வாழும் காலத்திலும் உண்டு. இதை பலரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்பார்கள். அப்படி உணர்ந்தவர்கள் தங்களின் பாவ வினைக்கு பரிகாரம் தேட நினைத்தால் அதற்கு சிறந்த பரிகாரமாக அன்னதானம் இருக்கும்.

navagragam

உண்மையில் அன்னதானம் என்பது என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். நாம் யாருக்கு செய்யும் அன்னதானம் உண்மையில் பாவ வினையை நீக்கும் தெரியுமா? வீடு, வாசல் இன்றி நிராதரவாக நிற்கும் ஒருவருக்கு கடும் பசியில் நீங்கள் செய்யும் அன்னதானம் உண்மையான அன்னதானமாக பார்க்கப்படுகிறது. கோவில்களுக்கு நீங்கள் போய் செய்யும் அன்னதானம் தர்ம கணக்கில் எழுதப்படும் தவிர உங்கள் பாவ வினையை அது தீர்க்காது என்பது தான் உண்மை. கோவில்களில் வரும் பக்தர்கள் உண்மையில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படுபவர்கள் அல்ல. இது நமக்கும் தெரியும்.

- Advertisement -

உண்மையிலேயே பசியில் வாடும் ஒருவனுக்கு நீங்கள் அன்னத்தை தானமாக வழங்கினால் உங்களுடைய கெட்ட கர்மவினை பலன்கள் குறையும். அது போல் நவகிரக தோஷம் நீங்க சனிக்கிழமைகளில் நவதானியத்தால் செய்யப்பட்ட தோசையை சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுங்கள். நவதானிய தோசை சனிக்கிழமை செய்து சாப்பிட்டால் நவ கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்குமாம். மேலும் சனிக்கிழமையில் உண்மையான அன்னதானத்தை நீங்கள் செய்வதால் கிரக தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.

annathanam

நவதானியங்கள் என்னென்ன? எந்த கிரகத்தை குறிப்பது?
கோதுமை – சூரியன், அரிசி – சந்திரன், துவரம் பருப்பு – செவ்வாய், பச்சைப்பயிறு – புதன், கொண்டைக்கடலை – குரு, மொச்சை – சுக்ரன், எள்ளு – சனி, கறுப்பு உளுந்து – ராகு, கொள்ளு – கேது. இப்போது இந்த நவதானிய அடை எப்படி செய்வது? என்பதை பார்ப்போம்.

- Advertisement -

navathaniya-dosai

நவதானிய அடை செய்முறை விளக்கம்:
9 தானியங்களையும் தலா ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக் கொண்டு முந்தைய நாள் இரவே ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் இந்த நவதானியங்களுடன் ஐந்து காய்ந்த மிளகாய்கள், ஒரு பெரிய துண்டு இஞ்சி, மிளகு-சீரகம் தலா ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை கொத்து ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்து கெட்டியாக அடை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள். பின்னர் தோசைக்கல்லில் அடை வார்த்து நல்லெண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுத்த பின்னர் பரிமாறலாம். இந்த தோசை செய்து சாப்பிடுவது உடல் எடையை சீராக வைக்கவும் உதவும். வாரம் ஒருமுறை சனிக்கிழமையில் செய்து சாப்பிட்டு ஆரோக்கியம் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
அஷ்ட லட்சுமிகளும், உங்கள் வீட்டுக்குள் குடியேறி அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்கள்! போதும் போதும் என்ற அளவிற்கு பொன் பொருள் சேர்ந்து கொண்டே இருக்கும். இந்த 1 முடிச்சு உங்கள் வீட்டில் இருந்தால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -