- Advertisement -
பொது பலன்

திருமணம் தள்ளிபோவதற்கான முக்கிய காரணம் என்ன தெரியுமா?

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்பார்கள். சிலருக்கு மிக எளிதாக நடைபெறும் திருமணம், சிலருக்கு மிகவும் சிரமப்பட்டு வரன் தேடியும், சரியான வரன் கிடைக்காமலும், அப்படியே கிடைத்தாலும், பல்வேறு காரணங்களால் தடைப்பட்டும் வருவதை நாம் அனுபவத்தில் காணமுடிகின்றது.

இப்படி திருமணத்தில் ஏற்படும் தடை தாமதத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி, ஜோதிடச்சுடர் ந.ஞானரதத்தைக் கேட்டோம். அதற்கு அவர் கூறிய பதில்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக…

- Advertisement -

ஜாதகம் காரணமா?

திருமண தடைக்கு காரணம் என்னவென்று அவர்களது ஜாதகத்தை ஆராய்ந்துபார்த்தால், கண்டுபிடித்து விடலாம். ஜாதகக் கட்டத்தில் லக்னத்துக்கு அடுத்த வீடான குடும்ப ஸ்தானம் என்று சொல்லப்படும் இரண்டாவது ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் என்று சொல்லப்படுகின்ற ஏழாமிடமும் மற்றும் புத்திர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாமிடமும் மற்றும் படுக்கை ஸ்தானம் என்று சொல்லக்கூடிய பன்னிரண்டாமிடமும் நன்றாக இருக்கவேண்டும்.

- Advertisement -

இதற்கும் அவர்களின் தகுதிக்கும் சம்பந்தம் இல்லை. பொருளாதாரம் அதிகம் இருப்பவர்களுக்குக் கூட தங்கள் பிள்ளைகளின் திருமணம் தள்ளிப்போவதைப் பார்க்கின்றோம். ஆனால், ஏழை எளியவர்களுக்கெல்லாம் திருமணம் காலத்தே நடைபெறுவதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

 

- Advertisement -

34 வயதில் திருமணம் நடைபெற்ற பெண்ணின் உதாரண ஜாதகம்

பிறந்த நேரம்: 01 05 மதியம்

பிறந்த தேதி:  9.9.1973

பிறந்த ஊர்:  சென்னை

ராசி மகரம்:

நட்சத்திரம் திருவோணம்

இந்தப் பெண்ணின் ஜாதகத்தில் ராசி மகரம். நட்சத்திரம் திருவோணம். லக்னம் தனுசு. இவரது ஜாதகத்தில் திருமணம் காலதாமதமானதற்குரிய காரணத்தை ஆராயும்போது, இவரது குடும்ப ஸ்தானமான 2 மிடத்தில் குரு நீசம் பெற்றிருக்கிறது. மேலும், ஏழாம் இடமான மிதுனத்தில் பாபகிரகமான சனி, கேது இணைந்துள்ளதாலும் மற்றும் லக்னத்தில் ராகு, ஏழில் கேது  அமையப் பெற்றுள்ளதாலும் திருமணத்தை மிகவும் காலதாமதப்படுத்த காரணமாகி விட்டது.

இதனால் இவரது திருமணம் 34 வயதில் நடந்தேறியது. ஆனால், இவருக்கு வாய்த்த கணவர் நல்ல பதவியிலும் அரசு வேலையிலும் இருக்கின்றார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண்குழந்தையும் ஒரு பெண் குழந்தையுமிருக்கின்றனர்.

திருமணத்தைத் தாமதமாக்கும் கிரக அமைப்புகள்:

* களத்திர ஸ்தானம் என்று சொல்லப்படும் 7 மிடத்தில் சனி வீற்றிருப்பது பாப கிரகப் பார்வை ஏழாமிடத்தில் விழுவது, ராகு, கேதுக்கள் 7 மிடத்தில் அமருவது, 7 மிடத்துக்குரிய கிரகம் (களத்திர ஸ்தானாதிபதி) 6,8,12 ல் மறைவது, சூரியன், செவ்வாய் சேர்ந்து 7மிடத்தில் இருப்பது சனி மற்றும் செவ்வாய் இணைந்து 7 மிடத்தைப் பார்ப்பது ஆகிய அமைப்புகள் இருந்தால், திருமணத்தடையை ஏற்படுத்தும்.

* பாப கிரகத்தின் பார்வை குடும்ப ஸ்தானமான 2 மிடத்தில் விழுவது, சனி குடும்ப ஸ்தானமான 2 மிடத்தில் வீற்றிருப்பது,  ராகு, கேதுக்கள் குடும்ப ஸ்தானத்தில் அமருவது, சூரியன்  2 மிடத்தில் இருப்பது, செவ்வாய், சனி இணைந்து 2 மிடத்தைப் பார்ப்பது ஆகிய அமைப்புகள் இருந்தால், திருமணத்தடை ஏற்பட்டு தாமதித்த திருமணத்துக்கு வழி வகுக்கும்.

* சுகங்களுக்கு அதிபதியான சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால், 2 மிடத்துக்குரிய கிரகம் மறைவு ஸ்தானமான 6,8,12 ல் இருந்தாலும், திருமணத்தடையை ஏற்படுத்தும்.

வரன் தேடும்போது முதலில் தம் பிள்ளைக்கு இளவயதில் திருமணம் நடைபெறுமா தாமதமாக திருமணம் நடைபெறுமா என்பதைப் பற்றி தெரிந்துகொண்டு, வரன் தேடுவது நல்லது.

- Advertisement -