- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

உங்கள் வீட்டு சாப்பாட்டு பானையில் இந்த தவறை செய்தால், அன்னபூரணியை அவமானப்படுத்தியதற்கு சமம்.

நம்முடைய வீடுகளில் தினம்தோறும் இட்லி, தோசை, பூரி, பொங்கல் இவைகளெல்லாம் செய்கிறோமோ இல்லையோ, கட்டாயம் சாதம் செய்வோம். ஆண்கள், அவரவர் வீட்டை விட்டு, தங்களுடைய வேலை காரணமாக தனியாக தங்கி இருந்தாலும், அவர்களும் சாதம் வடிக்க தான் செய்கிறார்கள். சாதம் வேகும் போதும் சரி. சாதத்தை வடித்த பின்பும் சரி. இந்த தவறுகளை ஆண்களும் செய்யக் கூடாது. பெண்களும் செய்யக் கூடாது. அது என்ன தவறு என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சாதம் வடிக்கும் போது முதலில் தண்ணீர் நிரம்பிய உலை பானையை, அடுப்பில் வைத்து கொதி வந்த பின்பு தான் அரிசியை போட வேண்டும். அரிசி பானை என்பது, நீங்கள் சாதம் வடிக்கும் அந்த பாத்திரம் தான். அரிசியை கழுவும் போது அதிலிருந்து அரிசியை எடுத்து வாயில் போட்டு எச்சில் பண்ணக்கூடாது. அரிசியை கழுவி உலையில் போட்டு விட்டீர்கள். அது வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு கூட, மற்ற கரண்டிகளை பயன்படுத்துவது தவறு தான். சாப்பாட்டிற்காக அன்ன கரண்டி என்று உள்ளது அல்லவா? அதை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

சாப்பாட்டை கலந்து பார்த்த பின்பு, அந்த கரண்டியை சிலபேர் சாப்பாட்டுக்கு பானையின் தலைப்பகுதியில் டப் டப் என்று தட்டுவார்கள். அது மிகவும் பெரிய தவறு. அன்னபூரணியின் தலையிலேயே அடிப்பதற்கு சமம். சாப்பாடு பரிமாறி விட்டு, அந்த கரண்டியில் ஒட்டிக் இருக்கும் சாப்பாட்டை, சாப்பாட்டு பானையில் விழ வைக்க வேண்டும் என்பதற்காகவும், கரண்டியை சாப்பாட்டு பானையின் தலையில் தட்டக் கூடாது என்று சொல்லப்படுகிறது. சாதத்தை வடித்து நிமிர்த்திய பின்பு, சாதம் வடித்த தட்டில், சாதம் ஒட்டியிருக்கும். நம் பாட்டிமார்கள் அதை எல்லாம் எடுத்து சாப்பாட்டு பானையில் ஒன்றாக போடுவார்கள். இது எதற்கு தெரியுமா?

அந்த தட்டில் இருக்கும் அரிசி பருக்கைகள், அதாவது சாப்பாட்டு பருக்கைகள் எல்லாம் தட்டில் தனித்தனியாக இருந்தால் உலர்ந்து போய்விடும். காய்ந்த தன்மைக்கு வந்துவிடும். மொறுமொறுவென்று குத்தும் அளவிற்கு மாறிவிடும். இப்படி சாதத்தை காய விடுவது அன்னபூரணியை அவமானப்படுத்தியதற்கு சமம். அன்னபூரணியை உலரவைத்ததற்கு சமமாக நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இந்த தவறை நீங்கள் செய்து வந்தீவர்களானால், தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள். மிகப்பெரிய பாவத்தை சேர்த்துவிடும்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் அந்த சாத பருக்கைகள், சாதத்தில் கலந்து வாய்க்குள் சென்று, தொண்டைக்குள் சென்று குத்திக் கொண்டால் பிரச்சனையாகி விடும் என்பதை மறந்து விடாதீர்கள். சாதம் பரிமாறும்போது அன்ன கரண்டியை கொண்டு தான் பரிமாறவேண்டும். சாப்பிட்டு முடித்த பின்பு அதில் இருக்கும் அன்ன கரண்டியை எடுத்து வெளியில் வைத்து காய விடக்கூடாது. அன்ன கரண்டியை சாதத்தின் உள்ளேயும் போட்டு மூடக்கூடாது. அந்த கரண்டியை காய விடாமல், சிங்கிள் போட்டு தண்ணீர் ஊற்றி தான் போடவேண்டும். உலர விடக்கூடாது.

நீங்கள் குக்கரில் சாதம் வைப்பவர்களாக இருந்தாலும் இதே முறைதான். குக்கரில் சாதத்தை வடித்து விட்டு அப்படியே விட்டு விட்டோமேயானால், அந்த சாதம் கொஞ்சம் கொஞ்சமாக உலர ஆரம்பிக்கும். அதாவது, வடித்தவுடன் சூடாக இருக்கும்போது மென்மையான தன்மையை சாதம் கொண்டிருந்தாலும், அந்த பாத்திரத்திலேயே விட்டுவிட்டு, பிறகு சிறிது நேரம் கழித்து பார்த்தோமேயானால் அந்த சாதம் கொஞ்சம் வறண்டு இருக்கும். ஆகையால் பாத்திரத்தில் இருந்து சாப்பாட்டை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றுவது நல்லது. குக்கரில் விசில் வரும் போது, சாதம் சிதறி இருக்கும். அந்த சாதத்தையும் ஊலரவைக்காமல், குக்கரின் மூடியை உடனடியாக கழுவி விடுங்கள்.

- Advertisement -

ஒரு சாப்பாட்டு வடிக்கும் பானைக்கு இத்தனை வழிமுறைகளா என்று மலைத்துப் போக வேண்டாம். இதை செய்வதற்கு பல மணி நேரம் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆகவே, இந்த தவறுகளை இதற்கு முன்பாக தெரியாமல் செய்து இருந்தால் தவறில்லை. தெரிந்த பின்பு திருத்திக் கொள்வதுதான் முறை. நம்முடைய முன்னோர்கள் சொல்லியிருக்கும் கூற்று பொய்யானது என்று நினைப்பவர்கள் இந்த தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். திருத்திக் கொள்வதும் திருத்திக் கொள்ளாததும் அவரவர் இஷ்டம் தான். திருத்திக் கொண்டால் நம் குடும்பத்திற்கு நல்லது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இன்று மைத்ர முகூர்த்தம்! இன்றைய தினம் எந்த நேரத்தில் கடன் தொகையை திருப்பித் தந்தால், பிரச்சனையில் இருந்து சீக்கிரம் விடுபடலாம்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Satham seivathu eppadi Tamil. Sadham vadithal. Sadam vadithal in Tamil. Sadam seivathu eppadi. Sadam vadipadhu eppadi.

- Advertisement -