இன்று மைத்ர முகூர்த்தம்! இன்றைய தினம் எந்த நேரத்தில் கடன் தொகையை திருப்பித் தந்தால், பிரச்சனையில் இருந்து சீக்கிரம் விடுபடலாம்?

கடன் பிரச்சனை இல்லாத மனிதர்களே இந்த பூமியில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாம் இந்த உலகத்தில் மனித பிறவி எடுத்ததே பூர்வஜென்ம கடனை அதற்காகத்தான் என்று சாஸ்திரம் சொல்கிறது. இப்படியிருக்க கடன் இல்லாத வாழ்க்கையை நம்மால் வாழ்ந்துவிட முடியுமா என்று கேட்டால்! அது சந்தேகத்திற்குரிய விஷயம் தான். இருந்தாலும் கடன் இல்லாத வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை என்பதால், முடிந்தவரை வைத்திருக்கும் கடனை சீக்கிரமே அடைத்து விடுவதுதான் நல்லது. இந்த கடனை சுலபமாக, விரைவாக அடைக்க நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ள ஒரு வழிதான் மைத்ர முகூர்த்தம். இந்த மைத்ர முகூர்த்தமானது, மாதத்திற்கு 2 முறை வரும். இந்த மாதம் வெள்ளிக்கிழமை தினமான இன்று வந்திருக்கிறது. இன்று மைத்ர முகூர்த்தமாக இருந்தாலும், குறிப்பிட்ட எந்த நேரத்தில் கடனை திருப்பித் தந்தால் நமக்கிருக்கும் கடன் பிரச்சனையிலிருந்து சுலபமாக வெளிவந்து, செல்வ வளத்தை பெறலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

kadan

கடன் தொகையை இன்றே, இந்த மைத்ர முகத்திலேயே மொத்தமாக திருப்பி தர வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களுக்கு இருக்கும் கடன் தொகையில் இருந்து ஒரு சிறு, குறிப்பிட்ட தொகையை மட்டுமே திருப்பி தந்தால் போதும். குறிப்பிட்ட அந்த கடன் பிரச்சனையிலிருந்து நீங்கள் சுலபமாக வெளிவந்து விடலாம்.

அஸ்வினி நட்சத்திரம் வரும் தினத்தன்று, மேஷ லக்ன நேரமும், அனுஷம் நட்சத்திரம் வரும் தினத்தன்று, விருச்சிக லக்ன நேரமும் தான் ‘மைத்ர முகூர்த்தம்’ என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட இந்த நேரத்தில் கடன் தொகையை திருப்பித் தந்தால், கடனை விரைவாக திருப்பித் தருவதற்கு நம்மை தூண்டும் தூண்டுகோலாக இந்த நட்சத்திரமும், இந்த லக்னமும் துணைபுரியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

calendar

சரி. இன்று குறிப்பிட்ட அந்த மைத்ர முகூர்த்தம் நேரம் எப்போது வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். 8.5.2020 வெள்ளிக்கிழமை தினமான இன்று, இரவு 6.55 மணியிலிருந்து 7.45 மணி வரை மைத்ர முகூர்த்தம் உள்ளது. அதாவது 7 மணியிலிருந்து 8 மணிக்குள், நீங்கள் உங்களது கடன் தொகையில் இருந்து ஒரு சிறு தொகையை கடன் தந்தவருக்கு திருப்பி தரலாம்.

- Advertisement -

இன்று இருக்கும் ஊரடங்கு உத்தரவு சூழ்நிலையால் உங்களால் கடன் தொகையை குறிப்பிட்ட நபரிடம் கொண்டு போய் கொடுக்க முடியவில்லை என்றால், அவர் பெயரை ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதி அவர் கையில் கொடுத்ததற்கு இணையாக அந்த பேப்பரில் வைத்து மடித்து உங்கள் பீரோவில் எடுத்து வைத்துவிடுங்கள். அல்லது ஆன்லைன் பரிமாற்றம் மூலம், உங்களுடைய வங்கி கணக்கிலிருந்து, கடன் கொடுத்தவரின் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்ய முடியுமென்றால், அந்த கடன் தொகையை குறிப்பிட்ட நபரின் வங்கி கணக்கில், குறிப்பிட்ட இந்த நேரத்தில் கொண்டு சேர்த்து விடுங்கள். அது உங்களுடைய இஷ்டம்தான். ஆனால் ஒரு கடன் தொகையானது கட்டாயம் இந்த நேரத்தில் அடைக்கப்பட்டால், அந்த கடன் கூடிய விரைவில் அடைந்து விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Sivan-God

பொதுவாகவே இன்று வெள்ளிக்கிழமை என்பதால் எல்லோருடைய வீட்டிலும் மாலை 6 மணிக்கு பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருப்பீர்கள். அதிலும் குறிப்பாக உங்கள் வீட்டில் சிவலிங்கங்கள் இருந்தால் அதற்கு அரிசி மாவினால் அபிஷேகம் செய்து, கோளறு பதிகம் படிப்பது இன்னும் நல்ல பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோளறு பதிகம் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
கோளறு பதிகம் ஸ்லோகம்

இதையும் படிக்கலாமே
இரவில் வீட்டை பெருக்கினால் என்ன நடக்கும் தெரியுமா? எப்படி வீட்டை பெருக்கினால் மஹாலக்ஷ்மி உங்கள் வீட்டிற்குள் நிரந்தரமாக தங்குவாள்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mythra muhurtham may 2020. Mythra muhurtham 2020 in Tamil.. Mythra muhurtham today. Mythra muhurtham in 2020. Mythra muhurtham Tamil.