- Advertisement -

சகல சௌபாக்கியம் கிடைக்க உதவும் சஷ்டி தீபம்

- Advertisement -

நினைக்கும் நேரம் எல்லாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாகவே கருதப்படுகிறது. முழுமனதோடு முருகா என்று கூப்பிட்டாலே கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் தான் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக கருதப்படுவதுதான் சஷ்டி திதி. வளர்பிறை சஷ்டியாக இருந்தாலும் தேய்பிறை சஷ்டியாக இருந்தாலும் முருகப்பெருமானை நம் முறையாகவும் முழு மனதோடும் வழிபாடு செய்யும் பொழுது முருகப்பெருமானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அந்த வகையில் தரித்திரம் நீங்கி சகல சௌபாக்கியத்துடன் வாழ்வதற்கு சஷ்டி திதி அன்று ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எவ்வளவு முயற்சி செய்தும் செல்வ செழிப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லை, பணவரவில் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது, கடனால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்று புலம்புபவர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு வளர்பிறை சஷ்டி நாளன்று முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். வளர்பிறை சஷ்டியில் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் சித்திரை மாதத்தின் வளர்பிறை சஷ்டி என்பது மே மாதம் மூன்றாம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. சனிக்கிழமை என்பது சனி தோஷத்தை நீக்க கூடியதாகவும், கிரக தோஷத்தை நீக்க கூடியதாகவும், பாவங்களை நீக்க கூடியதாகவும் திகழக்கூடிய ஒரு கிழமை. அந்த கிழமையோடு சஷ்டி திதியும் சேர்ந்து வருவதால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கர்ம வினைகளையும், தரித்திரத்தையும் நீக்குவதற்கு இந்த வளர்பிறை சஷ்டி திதி அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம்.

சஷ்டி திதி என்பது மே இரண்டாம் தேதி மதியம் 3:15 மணிக்கு ஆரம்பித்து மே மூன்றாம் தேதி மதியம் 2:04 மணி வரை இருக்கிறது. அதனால் சஷ்டி வழிபாட்டை செய்ய நினைப்பவர்கள் சஷ்டி திதி நிறைவடைவதற்குள் இருக்கக்கூடிய நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். எப்பொழுதும் சஷ்டி வழிபாடு செய்யக்கூடியவர்கள் தங்களுடைய வழிபாட்டை மேற்கொள்வதோடு இந்த ஒரு எளிமையான தீபத்தையும் ஏற்றுவதன் மூலம் சகல சௌபாக்கியத்தையும் பெற முடியும்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முதலில் வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு தாம்பால தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதில் சனிக்கிழமைக்குரிய தெய்வமான பெருமாளுக்கு உகந்த துளசி இலையை ஒரு கைப்பிடி அளவு போட்டு பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த தீபத்தில் வெட்டிவேரை போட வேண்டும். தீபம் எரிய எரிய வெட்டிவேரின் வாசம் வீடு முழுவதும் பரவ ஆரம்பிக்கும். இந்த தீபம் குறைந்தது 48 நிமிடம் எரிய வேண்டும்.

இந்த 48 நிமிடமும் நாம் வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கொண்டு முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், கந்த குரு கவசம் போன்றவற்றை பாராயணம் செய்து முருக வழிபாட்டில் ஈடுபட வேண்டும். இப்படி வெட்டிவேர் தீபம் ஏற்றி வைத்து முருகப் பெருமானை சஷ்டி திதி அன்று வழிபாடு செய்யும்பொழுது நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் விலகும். நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். அதன் மூலம் சகல சௌபாக்கியத்தையும் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:செல்வ செழிப்புடன் வாழ வளர்பிறை சஷ்டி வழிபாடு

வளர்பிறை சஷ்டி அன்று முருகப்பெருமானை முழுமனதோடு நினைத்து இந்த முறையில் தீபமேற்றி வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -