- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ செழிப்புடன் வாழ வளர்பிறை சஷ்டி வழிபாடு

செல்வ செழிப்புடன் வாழ வளர்பிறை சஷ்டி வழிபாடு

- Advertisement -

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பணத்திற்கு எந்தவித குறையும் இருக்கக் கூடாது என்றுதான் நினைப்போம். அந்த பணத்தை சம்பாதிப்பதற்காக பல விதங்களில் முயற்சியும் செய்வோம். இருப்பினும் அனைவராலும் பணத்தை சம்பாதிக்க முடியாது, அனைவராலும் செல்வ செழிப்புடன் வாழ முடியாது. அப்படி முயற்சிகள் செய்தும், கஷ்டப்பட்டும் செல்வ செழிப்புடன் வாழ இயலவில்லை என்பவர்கள் வளர்பிறை சக்தி நாளன்று எந்த முறையில் முருகப் பெருமானை வழிபட்டால் செல்வ செழிப்புடன் வாழலாம் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வளர்பிறை சஷ்டி வழிபாடு

முருகப்பெருமானுக்கு உகந்த திதியாக சஷ்டி திதி திகழ்கிறது. அதிலும் குறிப்பாக வளர்பிறை சஷ்டி என்பது நம்முடைய செல்வங்களை வளரச் செய்வதற்கு உதவும் என்று கூறப்படுகிறது. அதனால் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் வளர்பிறை சஷ்டியில் வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை கண்டிப்பான முறையில் தேய்பிறை சஷ்டியில் செய்யக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வளர்பிறை சஷ்டி வரக்கூடிய நாளில் எந்த நேரத்தில் செவ்வாய் ஹோரை வருகிறதோ அந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகம் முருகப் பெருமானுக்கு உகந்த கிரகம் என்பதால் செவ்வாய் ஹோரையில் நாம் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது முருகப்பெருமானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அதே சமயம் கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும். அந்த வகையில் சித்திரை மாதத்தின் வளர்பிறை சஷ்டி என்பது மே மாதம் மூன்றாம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய நாளில் செவ்வாய் ஹோரை என்பது காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள், மதியம் 3 மணியிலிருந்து 4 மணிக்குள் இரவு 10 மணியிலிருந்து 11 மணிக்குள் வரும். இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த வழிபாட்டை நாம் செய்யலாம்.

முருகப் பெருமானின் படத்திற்கு முன்பாக ஒன்று அல்லது ஆறு எண்ணிக்கையில் நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைத்துவிட்டு வலது கையில் ஆறு ஒரு ரூபாய் நாணயங்களை வைத்துக் கொண்டு பின்வரும் இந்த மந்திரத்தை ஆறு முறை கூற வேண்டும். அவ்வாறு ஆறு முறை கூறிய பிறகு ஒரு சிவப்பு நிற துணியில் கையில் வைத்திருக்கக்கூடிய ஆறு ஒரு ரூபாய் நாணயங்களையும் வைத்து மூட்டையாக கட்டி முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். அடுத்த மாதம் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி நாளில் மறுபடியும் இதே போல் புதிதாக ஆறு ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து மந்திரத்தை சொல்லி மூட்டையாக கட்டி வைக்க வேண்டும். பழைய ஒரு ரூபாய் நாணயங்களை முருகப் பெருமானின் ஆலயத்தில் இருக்கும் உண்டியலில் போட்டுவிட வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷன தேவ்யாயை
சர்வ தாரித்திரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா”

இதையும் படிக்கலாமே:அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

இப்படி தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி நாளில் இந்த முறையில் நாம் வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் முருகனின் அருளால் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்