- Advertisement -

சகல துன்பங்களை நீக்கும் உத்பன்ன ஏகாதசி

- Advertisement -

பெருமாளுக்கு உகந்த திதியாக கருதப்படக் கூடிய ஏகாதசி திதியானது மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டு முறை வரும். ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்றார் போல் இந்த ஏகாதசி விரதத்தின் பலனும் மாறுபடும். அந்த வகையில் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த மாதமாக திகழக்கூடிய கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை ஏகாதசி அன்று நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் விலகுவதற்கு ஏற்று வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

உத்பன்ன ஏகாதசி வழிபாடு

பெருமாளை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியான ஏகாதசி திதி அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம் பல அற்புதங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது. பலரும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி திதியில் தான் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். பெருமாளின் தீவிர பக்தராக இருப்பவர்கள் ஒவ்வொரு மாதத்தில் வரக்கூடிய ஏகாதசியிலும் விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை ஏகாதசியை உத்பன்ன ஏகாதேசி என்று கூறுவது உண்டு.

- Advertisement -

இந்த ஏகாதசியின் சிறப்புகளை பற்றி கிருஷ்ணர் தர்மரிடம் கூறி இருக்கிறார் என்று புராணங்கள் கூறுகிறது. நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலக வேண்டுமோ நாம் செய்த தான தர்மங்களின் பலன் நமக்கு கிடைக்க வேண்டுமோ இவை அனைத்தையும் பெறுவதற்கு ஒரு அற்புதமான தினமாக தான் இந்த உத்பன்ன ஏகாதசி திகழ்கிறது. பலரும் இந்த ஏகாதசிக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். ஏகாதசிக்கு தொடங்குவதற்கு முதல் நாளே விரதம் இருக்க ஆரம்பித்து ஏகாதேசி முடிந்த மறுநாள் தான் அந்த விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

இந்த முறை கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி என்பது நவம்பர் 26 அம் தேதி காலை 1:02 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் 27ஆம் தேதி காலை 3:48 மணிக்கு நிறைவடைகிறது. மூன்று நாட்களும் உபவாசம் இருக்க முடியாது என்பவர்கள் ஏகாதசி அன்று வீட்டிலேயே இந்த முறையில் ஒரே ஒரு மணி நேரம் மட்டும் தீபத்தை ஏற்றி வைத்து பெருமாளை வழிப்பட்டால் போதும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் எப்போதும் போல் விளக்கேற்றி வழிபாடுகளை செய்து கொள்ளுங்கள். மாலை 7 மணியில் இருந்து 8 மணிக்குள் ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதில் துளசி இலைகளை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி அல்லது தாமரை தண்டு திரி போட்டு வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபமானது ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக எரிய வேண்டும்.

இந்த தீபத்தை பார்த்தவாறு நம்முடைய துன்பங்கள் அனைத்தும் விலக வேண்டும் என்று பெருமாளிடம் கோரிக்கை வைக்க வேண்டும். இயன்றவர்கள் தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக செய்து இந்த தீபத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். தங்களுக்கு தெரிந்த பெருமாளின் மந்திரத்தை கூறி பெருமாளை முழு மனதோடு வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:கேட்டதை கொடுக்கும் 11 ரூபாய் வழிபாடு

இந்த முறையில் இந்த குறிப்பிட்ட ஒரு மணி நேரம் மட்டும் நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் பெருமாளின் அருளால் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களும், துன்பங்களும் விலகி ஓடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -