கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவர் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார். மேலும் இவரை வணங்கினால் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்குரிய பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருக்கின்றன. அதில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. திருச்செந்தூருக்கு சென்று வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் திருச்செந்தூர் முருகனை நினைத்து நாம் செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
11 ரூபாய் வழிபாடு
எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு என்பது திருச்செந்தூருக்கு இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் கடல் அருகே இருக்கக்கூடியதுதான். முதலில் கடலில் குளித்துவிட்டு பிறகு நாளி கிணற்றில் குளித்துவிட்டு அடுத்ததாக விநாயகப் பெருமானை வழிபாடு செய்து விட்டு முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று திருச்செந்தூர் கோவிலுக்கு செல்பவர்களுக்கு வழிமுறைகள் பல இருக்கின்றன. தங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பல வழிமுறைகளையும் வழிபாட்டு முறைகளையும் பின்பற்றும் பக்தர்கள் ஏராளமாக இருக்கின்றன. அந்த வகையில் வீட்டில் எளிமையாக செய்யக்கூடிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை முருகப்பெருமானுக்கு உகந்த இந்த கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமானுக்குரிய செவ்வாய்க்கிழமையில் தொடங்குவது என்பது மிகவும் சிறப்புக்குரியது. இதற்கு 11 ரூபாய் மட்டும் இருந்தால் போதும். மேலும் செவ்வாய் பகவானுக்குரிய தெய்வமாக முருகப்பெருமான் திகழ்வதால் செவ்வாய் பகவானுக்குரிய நிறமான சிவப்பு நிற துணி வேண்டும். செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணியில் இருந்து 7:00 மணிக்குள்ளோ அல்லது 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ள வரக்கூடிய செவ்வாய் ஹோரையில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக அகலில் நெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு சிவப்பு நிற துணியில் அந்த 11 ரூபாயை முடிந்து வைத்து கையில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு “ஓம் நமோ குமாராய நமஹ” என்னும் மந்திரத்தை குறைந்தபட்சம் ஒன்பது முறையில் இருந்து அதிகபட்சம் தங்களால் இயன்றவரை கூற வேண்டும். பிறகு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை முருகப்பெருமானிடம் முன்வைத்து வழிபாடு செய்துவிட்டு அந்த 11 ரூபாய் முடிச்சை முருக பெருமானின் பாதத்தில் வைத்து விடுங்கள். இப்படி தினமும் முருகப்பெருமானிடம் இருக்கக்கூடிய இந்த முடிச்சை கையில் வைத்துக்கொண்டு மந்திரத்தை கூறி வேண்டுதலை முன்வைத்து வழிபாடு செய்வதன் மூலம் முருகப்பெருமானின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும் அதன் மூலம் நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
வேண்டுதல் நிறைவேறிய பிறகு இந்த 11 ரூபாயை திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். துணியை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். ஒரு வேளை திருச்செந்தூர் செல்ல இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திலும் இதை சேர்க்கலாம். முடிந்த அளவிற்கு திருச்செந்தூர் சென்று வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு.
இதையும் படிக்கலாமே:கடன் தீர்க்கும் செவ்வாய்க்கிழமை ஏகாதசி வழிபாடு
முருகப்பெருமானை முழுமனதோடு நம்பி எந்த முறையில் 11 ரூபாயை எடுத்து வைத்து இந்த மந்திரத்தை கூறி வழிபாடு கூறி வேண்டுதலை முன்வைப்பவர்களுக்கு அந்த வேண்டுதல் விரைவிலயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.