
தேர்வுக்கு செல்லக்கூடிய பிள்ளைகள் மட்டும்தான் இந்த மந்திரத்தை படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறு பிள்ளைகளில் இருந்து, பெரிய பெரிய படிப்பு படிப்பவர்கள் வரை இந்த மந்திரத்தை சொல்லலாம். இந்த மந்திரத்தை காதால் கேட்டாலும் சரி அல்லது பிள்ளைகள் தங்களுடைய வாயால் இந்த மந்திரத்தை உச்சரித்தாலும் சரி, அவர்கள் கல்வியில் எந்த தடையும் வராது. தேர்வுகளில் தோல்வியை தழுவி, கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலையும் இருக்காது.
அதற்காக படிக்கவே வேண்டாம். மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும் தேர்வில் தேர்ச்சி பெற்று விடலாம் என்பது கிடையாது. உங்களுடைய படிப்போடு சேர்ந்து, உழைப்போடு சேர்ந்து, முயற்சிகளோடு சேர்ந்த இந்த மந்திரம், உங்களை வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்.
சில பிள்ளைகள் நன்றாக விழுந்து விழுந்து படிப்பார்கள். ஆனால் மண்டையில் ஏறவே ஏறாது. மார்க் மிக மிகக் குறைவாக வரும். தேர்வு சமயத்தில் உடல்நிலை சரியில்லாமல் போகும். தேர்வு நேரத்தில் குடும்ப விசேஷங்களுக்கு வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் வரும். படித்தது சீக்கிரம் மறந்து போகும். இப்படியே ஏதாவது ஒரு தடை படிக்கும் குழந்தைகளுக்கு வந்து கொண்டே இருந்தால், அந்த தடை விலகவும் இந்த மந்திரம் நிச்சயம் பயனுள்ளபடி இருக்கும்.
பெற்றவர்களும் பிள்ளைகளுக்காக இந்த மந்திரத்தை சொல்லலாம். குறிப்பாக இப்போது பொது தேர்வு தொடங்கிவிட்டது. 10ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த காலகட்டம் ரொம்ப ரொம்ப அவசியமான காலகட்டம். இந்த நாட்களில் படிக்கத் துவங்குவதற்கு முன்பு, தேர்வுக்கு செல்வதற்கு முன்பு இந்த மந்திரத்தை படிக்கச் சொல்லுங்கள். படித்த விஷயங்கள் தேர்வு எழுதும் போது நினைவிற்கு வரும். படித்த விஷயங்கள் எதுவும் மறக்காது. தேர்வுக்காண ஒரு பதட்டமும் பயமும் இருக்காது. தெளிவான மனதோடு தேர்வு எழுதி வெற்றிக்கான ஆன்மீக ரீதியாக இந்த மந்திரம் பயன்படும்.
ஸ்ரீ வித்யா ரூபிணி, சரஸ்வதி, சகலகலா வல்லி,
சாரபிம்பதரி, சாரதா தேவி, சாஸ்திர வல்லீ,
வீணா, புஷ்டக தாரிணி, வாணி, கமலா பாணி
வாக் தேவி, வரதயாகி, புஸ்தக ஹஸ்தே நமஸ்துதே!
ஒவ்வொரு வார்த்தையாக பொறுமையாக படித்தால் இந்த மந்திரத்தை சுலபமாக படித்து விடலாம். பார்த்தே இந்த மந்திரத்தை படியுங்கள். தேர்வு நேரத்தில் மட்டும் கிடையாது. தினமும் இந்த மந்திரத்தை படித்து விட்டு பள்ளிக்கூடம் சென்றால், படிக்கும் திறன் அதிகரிக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். படிப்பில் எந்த ஒரு தடையும் வராமலும் இருக்கும்.
டாக்டருக்கு படிக்க வேண்டும், இன்ஜினியருக்கு படிக்க வேண்டும், டீச்சருக்கு படிக்க வேண்டும், விஞ்ஞானியாக வேண்டும் இன்னும் பல விஷயங்களை மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், உங்கள் பிள்ளைகளின் கனவு நினைவாக ஆன்மீக ரீதியாக எங்களால் முடிந்த உதவிதான் இந்த மந்திரம். தேவைப்படுபவர்கள் மந்திரத்தை பயன்படுத்தி பலன் அடையவும்.
இதையும் படிக்கலாமே: கோடான கோடி கடனை அடைக்கும் பெருமாள் மந்திரம்
இந்த மந்திரத்தை படிக்க எந்த கட்டுப்பாடும் யாருக்கும் கிடையாது. நீங்கள் அமர்ந்த இடத்திலிருந்து இந்த மந்திரத்தை படித்துக் கொள்ளலாம். மனதில் சரஸ்வதியை ஹயக்ரீவரை நினைத்துக் கொள்ளுங்கள். அது போதும். அனைத்து மாணவர்களும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டிக் கொண்டு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்