கோடான கோடி கடன் அடைய வேண்டுமா? வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் நிம்மதியை இழந்த தவிப்பவர்களுக்கு இந்த மந்திரம் ஒரு வர பிரசாதம். இவ்வளவு எளிமையான மந்திரம், இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரத்தை எங்கு தேடினாலும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மந்திரத்தை தவறாமல் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தினமும் காலையில் இந்த மந்திரத்தை பின் சொல்லக்கூடிய முறைப்படி சொன்னாலே போதும். பெருமாள் உங்களுக்கு கோடி கோடியான செல்வங்களை வாரிக் கொடுப்பார். கடன் சுமையை முற்றிலுமாக படிப்படியாக குறைத்து விடுவார். உங்கள் பிரச்சனைகளை விரைவாக தீர்க்க வந்திருக்கும் அந்த மந்திரம் என்ன, அந்த மந்திரத்தை எப்படி சொல்வது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி, சுவாமிக்கு 2 கல்கண்டு நெய்வேத்தியமாக வைத்து, இந்த மந்திரத்தை சொல்வது சிறப்பு. அதிலும் குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் பெருமாள் முன்பு இந்த மந்திரத்தை சொன்னால் இரட்டிப்பு மடங்கு பலன் அல்ல. 200 மடங்கு பலன் உங்களை வந்து சேரும். உங்கள் வீட்டு பக்கத்தில் பசுமாடு இருக்கிறது.
பசு தொழுவம் இருக்கிறது என்றால், அந்த இடத்தில் அமர்ந்தும் இந்த மந்திரத்தை சொல்லலாம். முடிந்தால் பசு மாட்டிற்கு பின்புறம் கையை வைத்து இந்த மந்திரத்தை சொல்லலாம். ஆனால் எல்லோரும் ரிஸ்க் எடுக்காதீங்க. சில பசு எட்டி உதைத்து விடும். நல்ல பழக்கம் உள்ள பசு, முட்டாத மாடு என்றால் இதை நீங்கள் பின்பற்றலாம். சரிங்க சொல்ல வேண்டிய மந்திரம் தான் என்ன.
கடன் தீர்க்கும் மந்திரம்
ஓம் யக்ஷ்ராஜாய நமஹ !
Om Yaksharajaya namaha !
இவ்வளவுதான். ஒரு வரி மந்திரம். 48 நாள் தொடர்ந்து இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லும் போதே வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய நல்லது நடக்க துவங்கிவிடும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வருமானத்துக்கு தேவையான அத்தனை வழிகளையும் அந்த பெருமாள் உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பார். குருவாயூரப்பன் புகைப்படம் இருந்தால் கூட, அந்த சுவாமியின் முன்பு இந்த மந்திரத்தை சொல்லலாம்.
இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமை சஷ்டி திதி வழிபாடு
பூஜை அறையில் விளக்கு ஏற்றி கல்கண்டு நெய்வேத்தியம் வைத்து மந்திரத்தை சொல்லி இறுதியாக தூப தீப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். எவ்வளவோ இன்னல்கள் வாழ்க்கையில் தீர்க்க முடியாமல் அப்படியே கிடக்கிறது. அதையெல்லாம் இறைவனின் பாதத்தில் போட்டுவிட்டு இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள். இன்னல்கள் விலகி, இன்பம் உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.