- Advertisement -
- Advertisement -

தை மாதம் என்றதும் நம் நினைவிற்கு எப்படி பொங்கல் ஞாபகத்திற்கு வருகிறதோ அதே போல் தான் தைப்பூசமும் ஞாபகத்திற்கு வரும். முருகப்பெருமானுக்காக விரதம் இருந்து பாதயாத்திரையாக முருகப்பெருமானின் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வளவு சிறப்பு மிகுந்த தைப்பூசம் வரக்கூடிய தை மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சஷ்டியை அன்று முருகப் பெருமானை இந்த முறையில் நாம் வழிபாடு செய்ய நம்முடைய வேலை தொடர்பான அனைத்து வேண்டுதலையும் நிறைவேற்றுவார். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நல்ல வேலை கிடைக்க சஷ்டி வழிபாடு

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த தினமாக கருதப்படுவது சஷ்டி திதி வரக்கூடிய தினம் தான். சஷ்டி திதி அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முருகனின் அருள் பரிபூரணமாக கிடைத்தாலே நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்துமே தீர்ந்துவிடும். அவனின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த சஷ்டி திதி அன்று வேலை தொடர்பான வேண்டுதல்கள் நிறைவேற செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

ஜனவரி மாதம் 19ஆம் தேதி தை மாதத்தின் ஆறாம் நாள் சஷ்டி திதி வருகிறது. ஆறு என்பது முருகப்பெருமானுக்கு உகந்த எண் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் இந்த சஷ்டி திதி என்பது கூடுதல் சிறப்பை தருகிறது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலை தொடர்பான வேண்டுதல்களை முன்வைத்து நம் முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம். இந்த வழிபாட்டை மாலை 6:00 மணிக்கு செய்ய வேண்டும். இதற்கு நல்ல கிழியாத வெற்றிலையாக ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த வெற்றிலையின் மேல் சுத்தமான பசு நெய்யை தடவ வேண்டும். இதை அப்படியே முருகப் பெருமானின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். அந்த வெற்றிலைக்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு இந்த தீபத்தை பார்த்தவாறு “ஓம் சரவணபவ ஓம்” என்னும் முருகப்பெருமானின் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.

- Advertisement -

பிறகு முருகப்பெருமானிடம் நம்முடைய வேலை தொடர்பான வேண்டுதலை முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த முறையில் தீபமேற்றி முருகப் பெருமானின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய நம்முடைய வேலை தொடர்பான அனைத்து வேண்டுதலையும் முருகப்பெருமான் நிறைவேற்றுவார். மேலும் அவருடைய பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட தை ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

பலரும் வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் முயற்சி செய்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த முறையில் முருகப் பெருமானுக்கு வழிபாடு செய்து முயற்சிகளை மேற்கொண்டால் அந்த முயற்சிகள் நிச்சயம் முருகப்பெருமானின் அருளால் வெற்றி பெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -