- Advertisement -
- Advertisement -

தேய்பிறை அஷ்டமி என்பது காலபைரவருக்கு உகந்த தினமாக திகழ்கிறது. அதே அஷ்டமி திதி வாராகி அம்மனுக்கும் உகந்த திதியாக திகழ்கிறது. எப்படி பஞ்சமி திதி வாராகி அம்மனுக்கு உகந்த திதியோ அதேபோல் அஷ்டமி திதியும் வாராஹி அம்மனுக்கு உகந்த திதியாக தான் கருதப்படுகிறது. கால பைரவரை நினைத்து நாம் அஷ்டமியில் எப்படி விளக்கேற்றி பூஜை செய்வோமோ அதே போல் வாராகி அம்மனையும் நினைத்து தீபமேற்றி வழிபாடு செய்ய இருவரின் அருளும் பரிபூரணமாக கிடைத்து எதிரிகள் மற்றும் கடன் பிரச்சனைகள் நீங்கும். அப்படி எதிரிகள் மற்றும் கடன் பிரச்சனை நீங்க செய்யக்கூடிய தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு அஷ்ட பைரவர்கள் இருப்பது போலவே அஷ்டவராகியும் இருக்கிறார்கள். எப்படி கால பைரவரை வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லை நீங்குமோ அதே போல் வராகி அம்மனையும் நாம் வழிபட்டோம் என்றால் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

வைகாசி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமியை சதாசிவாஷ்டமி என்று கூறுவோம். இது நாளை 11 மணி 22 நிமிடங்களுக்கு பிறகு ஆரம்பிக்கிறது. இந்த வழிபாட்டை இரவு குரு ஹோரையான 8 மணியிலிருந்து 9 மணிக்குள் செய்யலாம். இதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசியை போட்டு சிறிது மஞ்சளை கலந்து அட்சதையாக தயார் செய்து பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேலே ஒரு பெரிய அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் சுத்தமான நல்லெண்ணையை ஊற்றி சிவப்பு நிற திரியை போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த துணியில் பச்சை நிற பேனாவால் யாரிடம் கடன் வாங்கினீர்களோ அவர்களின் பெயரையும் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறீர்களோ அந்தக் கடன் தொகையையும் எழுத வேண்டும். பிறகு அதில் 9 அல்லது 27 என்ற எண்ணிக்கையில் மிளகை வைத்து மூட்டையாக கட்டி அகல் விளக்கில் இருக்கக்கூடிய நல்லெண்ணெயில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது தீபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த வாராஹி அம்மனின் மந்திரத்தை 33 முறை கூற வேண்டும். இதே போல் “ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ” என்னும் காலபைரவர் மந்திரத்தையும் 33 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு விளக்கில் போட்டு வைத்திருந்த அந்த மிளகு மூட்டையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து அதனுடன் கற்பூரத்தை வைத்து எரிய விட வேண்டும். இப்படி நாளைய தினம் நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய எதிரிகளின் பிரச்சனைகள் தீருவதோடு கடன் பிரச்சினையும் தீரும்.

இதையும் படிக்கலாமே: பண பிரச்சினை தீர தயிர் பரிகாரம்

மிகவும் சக்தி வாய்ந்த இந்த வாராகி மற்றும் கால பைரவரின் வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதோடு இந்த வழிபாட்டை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -