- Advertisement -

செல்வ செழிப்பு அதிகரிக்க பஞ்சமி தீப வழிபாடு

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு கடன் என்பது கண்டிப்பாக இருக்கும். கடன் இல்லாத மனிதரை இந்த உலகத்தில் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகவே திகழ்கிறது. எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும் பலரது வாழ்க்கை அந்த கடனை கட்டி அடைப்பதற்கே சரியாகி விடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களும் கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வாழ்வதற்கு வழியே இல்லை என்று வருத்தப்பட்டு கொண்டு இருப்பவர்களும் பஞ்சமி தினத்தன்று வாராகி அம்மனுக்கு ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பஞ்சமி தீப வழிபாடு

பொதுவாக வாராஹி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும் எதிரிகளின் தொல்லை விலகும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அதே வாராஹி அம்மனிடம் நாம் என்ன வேண்டும் என்று கேட்டு வழிபாடு செய்கிறோமோ அதை வாரி வழங்குவாள் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் பஞ்சமி திதி அன்று செல்வ செழிப்புடன் வாழ்வதற்கும் கடன் பிரச்சினை தீருவதற்கும் வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்யலாம். அந்த வழிபாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

பொதுவாக வாராஹி அம்மனுக்குரிய திதியான பஞ்சமி திதி அன்று மாலை நேரத்தில் வாராகி அம்மனை வழிபாடு செய்யும் வழக்கம் என்பது அனைவருக்கும் இருக்கும். அந்த வழிபாட்டோடு இந்த ஒரு தீபத்தையும் ஏற்றி வைத்து வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு செல்வ செழிப்பு உயரும் என்று கூறப்படுகிறது. இந்த மாதம் பஞ்சமி திதி என்பது கூடுதல் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் கார்த்திகை மாதத்தின் ஐந்தாம் நாளில் ஐந்தாவது திதியான பஞ்சமி திதி என்பது வருகிறது. மேலும் புதன்கிழமையில் வருகிறது. புதன் பகவானுக்குரிய எண்ணாகவும் ஐந்து திகழ்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து வரக்கூடிய இந்த நாளில் நாம் இந்த முறையில் பரிகாரம் செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கையின் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது.

மாலை நேரத்தில் எப்பொழுதும் போல் வீட்டில் எந்த முறையில் வாராகி அம்மனுக்கு வழிபாடுகள் செய்வீர்களோ அதே முறையில் வழிபாடுகளை செய்து கொள்ளுங்கள். அபிஷேகம் செய்வது, நெய்வேத்தியம் வைப்பது, மலர்களை வைத்து அலங்காரம் செய்வது, தீபம் ஏற்றுவது போன்ற அனைத்தையும் செய்து முடித்த பிறகு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஐந்து என்ற எண்ணிக்கையில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படக்கூடியது செம்பருத்தி இவை. கிழியாத நல்ல செம்பருத்தி இலையாக 5 செம்பருத்தி இலையை எடுத்து அதை சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு மஞ்சளில் பன்னீரை ஊற்றி நன்றாக கலந்து ஒரு குச்சியை பயன்படுத்தி அந்த இலையின் நடுவில் 555 என்று எழுத வேண்டும். இப்படி ஒவ்வொரு இலையிலும் எழுதிக் கொள்ளுங்கள். இலையின் நுனி தாம்பாளத்திற்குள் வருவது போல் வட்ட வடிவில் இந்த இலைகள் இருக்க வேண்டும்.

செம்பருத்தி இலையின் நுனியில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அந்த தாம்பாளத்திற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை அந்த தீபத்திற்கு அருகே வைக்க வேண்டும். அந்த ஐந்து ரூபாய் நாணயத்திற்கு மேலே ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். பச்சை கற்பூரத்திற்கு மேலே உடையாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஏலக்காயை வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி வைத்து முடித்த பிறகு வாராகி அம்மனுக்கு நமக்கு தெரிந்த மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்வோம் அல்லவா? அது போல் அர்ச்சனை செய்து வழிபாடுகளை நிறைவு செய்து கொள்ள வேண்டும். தீபம் குறைந்தது அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும். பிறகு தீபத்தை குளிர வைத்துக் கொள்ளுங்கள். தீபத்திற்கு அருகில் வைத்திருந்த ஐந்து ரூபாய், பச்சை கற்பூரம், ஏலக்காய் இதை மூன்றையும் ஒரு சிறிய துணியில் அல்லது பிளாஸ்டிக் கவரில் போட்டு கட்டி நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.

ஒரு மாத காலம் வரை இது அப்படியே இருக்கட்டும். அடுத்த தேய்பிறை பஞ்சமி வரும் பொழுது இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து சுப காரிய செலவிற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஏலக்காயை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். பச்சை கற்பூரம் கரைந்து போயிருக்கும்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நிறைவேற பஞ்சமி பரிகாரம்

இந்த முறையில் வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு வாராகி அம்மனின் அருளால் செல்வ செழிப்பு உயரும், பணத்தடை நீங்கும், கடன் பிரச்சினை முற்றிலும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -