- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்த காரியம் நிறைவேற பஞ்சமி பரிகாரம்

நினைத்த காரியம் நிறைவேற பஞ்சமி பரிகாரம்

- Advertisement -

வாராகி அம்மனை இஷ்ட தெய்வமாக பாவித்து வழிபாடு செய்பவர்கள் இன்றைய காலத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடிய வாராகி அம்மனை இஷ்ட தெய்வமாக பாவித்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களும், எதிரிகள் தொல்லையும் படிப்படியாக விலக ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்குரிய திதியாக கருதப்படுவது தான் பஞ்சமி திதி. இந்த பஞ்சமி திதி அன்று எந்த முறையில் நாம் பரிகாரம் செய்தால் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பஞ்சமி பரிகாரம்

நீண்ட நாட்களாக ஒரு காரியத்தை நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த காரியம் நடைபெறாமல் ஏதாவது ஒரு தடை வந்து கொண்டே இருக்கிறது என்று புலம்புபவர்கள் புதன்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய இந்த பஞ்சமி திதியை தவறவிடாமல் இந்த வெந்தய பரிகாரத்தை செய்து பாருங்கள். விரைவிலேயே உங்களுடைய காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்துமே நீங்கி காரிய வெற்றி உண்டாகும். அந்த பரிகாரத்தை இப்பொழுது தெரிந்து கொள்வோமா?

- Advertisement -

இந்த பரிகாரத்தை மாலை 6:00 மணிக்கு தான் செய்ய வேண்டும். எப்பொழுதும் வீட்டில் இருக்கக்கூடிய வாராகி அம்மனுக்கு எந்த முறையில் பஞ்சமி நாளில் வழிபாடுகள் செய்வோமோ அதே போல் வழிபாடுகளை செய்து வைத்துக் கொள்ளுங்கள். பஞ்சமி திதியில் வழிபாடு செய்யும் வழக்கம் இல்லை ஆனால் வணங்க மட்டும் செய்வோம் என்பவர்கள் பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு நமக்கு ஒரு வெற்றிலையும் 6 எண்ணிக்கையில் வெந்தயமும் வேண்டும். கிழியாத நல்ல வெற்றிலையாக ஒரு வெற்றிலையை எடுத்து அதை சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் துடித்துக் கொள்ளுங்கள். ஆறு வெந்தயத்தை எடுத்து அந்த வெற்றிலையின் நடுவே வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இதை கையில் வைத்துக்கொண்டு உங்களுடைய எந்த காரியம் தடைப்பட்டு இருக்கிறதோ அந்த காரியம் விரைவிலேயே நடைபெற வேண்டும், பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வாராஹி அம்மனை நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவ்வாறு வேண்டி முடித்த பிறகு இந்த வெற்றிலையை வெந்தயத்துடன் சேர்த்து அப்படியே வாராகி அம்மனின் பாதத்தில் வைத்து விடுங்கள். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக இந்த வெற்றிலை மற்றும் வெந்தயத்தை எடுத்து வீட்டில் எந்த செடி நாம் வளர்கிறோமோ அந்த செடி அடியில் போட்டு விட வேண்டும். வெந்தயம் வெளியில் தெரியக்கூடாது. அதாவது சிறிதளவு மண்ணை எடுத்து அதன் மேல் போட்டு மூடி விட வேண்டும். குறிப்பாக துளசி செடி இருக்கும் தொட்டியில் செய்வது என்பது மிகுந்த பலனை தரும் என்றே கூறப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும். மேலும் பணவரவில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும் தீரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:

வெந்தயத்தை வைத்து பல பணம் தொடர்பான பரிகாரங்களை நாம் பார்த்திருப்போம். பஞ்சமி திதியில் இந்த முறையில் வாராகி அம்மனை நினைத்து இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்தது நினைத்தபடி நடந்தேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்