
கார்த்திகை மாதம் என்பது சிவபெருமானுக்குரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். மேலும் சிவபெருமானுக்குரிய கிழமையாக திகழ்வது திங்கட்கிழமை. திங்கட்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய மூன்றாம் பிறை என்பது சிவபெருமானின் வழிபாட்டிற்கு அற்புதமான ஒரு நாளாகவே திகழ்கிறது. அன்றைய நாளில் சந்திரனின் ஆதிக்கம் என்பதும் அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட நாளில் செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரம் நம்முடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பை அதிகரிக்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சிவபெருமான் தன்னுடைய தலையில் சூடிக்கொண்டு இருப்பதுதான் மூன்றாம் பிறை. இந்த மூன்றாம் பிறை வரக்கூடிய நாளில் சந்திர பகவானையும் சிவபெருமானையும் வழிபாடு செய்பவர்களுக்கு பல அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மூன்றாம் பிறையானது சந்திர பகவானுக்குரிய கிழமையான திங்கள்கிழமையுடன் சேர்ந்து வருவதால் அதற்கு இன்னும் அதிக பலனே இருக்கிறது. வழிபாடு செய்ய இயலாதவர்கள் கூட இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்வதன் மூலம் செல்வ செழிப்புடன் வாழ முடியும்.
பஞ்சாங்கத்தின் படி டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி மாலை 5:31 மணி முதல் 6:29 மணிக்குள் மூன்றாம் பிறை தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் சந்திர தரிசனத்தை செய்வதோடு இந்த பரிகாரத்தையும் செய்யலாம். ஒருவேளை இந்த நேரத்தை தவறவிட்டவர்கள் அன்று இரவு 12 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்திற்கு சந்திர பகவானுக்குரிய பச்சரிசி வேண்டும். அடுத்ததாக இரண்டு ரூபாய் நாணயமும், இரண்டு ஏலக்காயும், இரண்டு கிராம்பும் வேண்டும். இரண்டு என்பது சந்திர பகவானுக்குரிய எண் என்பதால் அனைத்தையும் இரண்டு என்ற எண்ணிக்கையில் எடுத்து வைத்துக் கொள்கிறோம்.
ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை போட்டுக் கொள்ளுங்கள். பச்சரிசிக்கு மேல் இரண்டு ரூபாய் நாணயத்தை வைத்து, அந்த நாணயத்திற்கு மேல் இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் வைக்க வேண்டும். இந்த கிண்ணத்தை எந்த இடத்தில் நாம் பணம் வைத்திருக்கிறோமோ அந்த இடத்திற்கு பக்கத்தில் வைக்க வேண்டும். பீரோவாக இருந்தால் பீரோவிற்கு பக்கத்தில், லாக்கராக இருந்தால் லாக்கருக்கு பக்கத்தில் வைக்க வேண்டும்.
அன்று இரவு முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் பச்சரிசியை எடுத்து எறும்புகள் இருக்கும் இடத்தில் போட்டு விட வேண்டும். இரண்டு ரூபாய் நாணயத்தையும், கிராம்பையும், ஏலக்காயையும் ஒரு கவரில் போட்டு பணம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மூன்றாம் பிறை நாளன்று இந்த முறையில் நாம் பரிகாரம் செய்வதன் மூலம் சந்திர பகவானின் அருளும் சிவபெருமானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று செல்வ வளம் அதிகரிக்கும். அதன் மூலம் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: கார்த்திகை வளர்பிறை தீப வழிபாடு
எந்தவித வழிப்பாடும் இல்லாமல் செய்யக்கூடிய இந்த தாந்திரீக பரிகாரத்தை முழு மனதுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் செல்வ வளம் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.