- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகார்த்திகை வளர்பிறை தீப வழிபாடு

கார்த்திகை வளர்பிறை தீப வழிபாடு

- Advertisement -

தீபத்திற்கு என்றே பெயர் போன மாதமாக திகழ்வதுதான் கார்த்திகை மாதம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை நாட்கள் தேய்பிறை நாட்கள் என்று வரும். வளர்பிறை நாட்களில் நாம் செய்யக்கூடிய வழிபாடுகள் நமக்கு செல்வ செழிப்பை வளர்த்துவிடும் என்றும், தேய்பிறை நாட்களில் நாம் செய்யக்கூடிய வழிபாடுகள் நம்முடைய கஷ்டங்களை தேய்ந்து போக செய்யும் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் வளர்பிறை நாட்களில் வழிபாடு செய்யும்பொழுது நன்மைகள் வளர வேண்டும் என்றும் தேய்பிறை நாட்களில் வழிபாடு செய்யும்பொழுது தீமைகள் விலக வேண்டும் என்றும் வேண்டுதலை வைக்க வேண்டும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கார்த்திகை வளர்பிறை நாட்களில் செய்ய வேண்டிய தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கார்த்திகை வளர்பிறை தீப வழிபாடு

கார்த்திகை மாதம் தொடங்கியதும் பலரும் தங்களுடைய நிலைவாசலில் மாலை நேரத்தில் தீபமேற்றி வழிபாடு செய்வார்கள் அதோடு மட்டுமல்லாமல் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை நாட்களில் இந்த இரண்டு தீபத்தை ஏற்றி நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய செல்வ வளம் என்பது அதிகரிக்கும். இந்த வளர்பிறை நாட்கள் என்பது டிசம்பர் இரண்டாம் தேதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பித்து பௌர்ணமி வரை அதாவது டிசம்பர் 15ஆம் தேதி வரை இருக்கிறது.

- Advertisement -

இந்த நாட்களில் தொடர்ச்சியாக நாம் இந்த இரண்டு தீபத்தையும் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஒரு வேளை தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் இந்த வளர்பிறை நாட்களில் வரக்கூடிய செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமி போன்ற தினங்களிலாவது இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை வீட்டு பூஜை அறையில் தான் ஏற்ற வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றலாம். அல்லது மாலை நேரத்தில் ஏற்றலாம். முதல் நாள் எந்த நேரத்தில் ஏற்றுகிறோமோ அதே நேரத்தில் தான் மற்ற நாட்களிலும் ஏற்ற வேண்டும்.

முதல் தீபம் மாவிளக்கு தீபம். பச்சரிசி மாவில் வெல்லம் ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து மாவிளக்காக தயார் செய்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு குலதெய்வ படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அடுத்ததாக உப்பு தீபம் ஒரு அகல் விளக்கில் கல் உப்பை வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இதன் இந்த இரண்டு தீபத்தையும் குலதெய்வத்தை நினைத்துக் கொண்டோ இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொண்டோ ஏற்றலாம். எந்த தெய்வத்தை நினைத்து ஏற்றினாலும் இந்த தீபம் ஏற்றுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களும் வளர ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை மூன்றாவது சோமவார வழிபாடு

வாழ்க்கையில் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை நாட்களில் இந்த இரண்டு தீபத்தையும் முழுமனதோடு ஏற்றி வழிபாடு செய்ய அனைத்து விதமான செல்வங்களும் அவர்கள் வாழ்க்கையில் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்