- Advertisement -

வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை உடனடியாக அடித்து விரட்டும் சக்தி கொண்ட ‘சக்தி தீபம்’! பராசக்தியை நம் வீட்டில் அமர வைப்பது எப்படி?

நம்மில் நிறைய பேருக்கு வீட்டில் கெட்ட சக்திகள், கண்ணுக்கு தெரியாமல் உலாவுவதாக ஒரு எண்ணம் இருக்கும். இது சில சமயங்களில் உண்மையாக இருந்தாலும், பல நேரங்களில் நம்முடைய பிரம்மை என்றே சொல்லவேண்டும். நம்மை யாரோ ஒருவர் உற்றுநோக்கி கொண்டிருப்பது போல தோன்றும். நாம் தூங்கும் போது யாரோ ஒருவர் நம்மை அழுத்துவது போல தோன்றும். எதிர்பாராத சமயத்தில் கொலுசு சத்தங்கள் கேட்கும். திடீரென்று கருப்பு உருவம் நம் முன்னே நிற்பது போல, இப்படியாக எதிர்மறை ஆற்றலினால் உங்களுக்கு தொந்தரவு இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் சக்தி தேவியை உங்களுடைய வீட்டில் ஆவாகனம் செய்து, இந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபடுவதன் மூலம், எதிர்மறை ஆற்றலில் இருந்து ஒரே நாளில் விடுபடுவதை உணர முடியும். அந்த சக்தி தீபத்தை நம்முடைய வீட்டில் எப்படி ஏற்றுவது? சக்தி தேவியை நம் வீட்டில் எப்படி ஆவாகனம் செய்வது?

பராசக்திக்கு மிகவும் உகந்தது எலுமிச்சை. பொதுவாகவே அம்மன் வழிபாட்டில் எலுமிச்சம்பழத்திற்கு முன்னுரிமை உண்டு. ஒரு எலுமிச்சை பழத்தை கொஞ்சம் பெரிய அளவில் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு தாம்பூல தட்டில் வேப்பிலைகளை பரப்பி அதன் மேலே பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். தயாராக இருக்கும் எலுமிச்சம் பழத்தை சுத்தமான மஞ்சள் தண்ணீரில் கழுவி, எலுமிச்சம்பழத்திற்கு முழுமையாக மஞ்சளை பூசி, ஒரு குங்குமப் பொட்டு வைத்து அம்மனாக பாவித்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த எலுமிச்சம் கனியை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு ‘ஓம் பராசக்தி தாயே போற்றி!’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும். அதன் பின்பு கையிலிருக்கும் எலுமிச்சம்பழத்தை அலங்காரம் செய்த தட்டின் மேல் வைத்து விடுங்கள்.

அடுத்தபடியாக ஒரு எச்சில் படாத சிறிய பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, அதில் கொஞ்சமாக பச்சைக்கற்பூரம், கொஞ்சமாக ஜவ்வாது பொடி, கொஞ்சமாக மஞ்சள் தூளை போட்டு, நன்றாக கலந்து விட்டு இதில் ஒரு கொத்து வேப்பிலையை போட்டுக் கொள்ள வேண்டும். இந்தப் பாத்திரத்தின் மீது, வலது உள்ளங்கையை வைத்து மூடி, அந்தப் பராசக்தி தேவியை, அந்த பத்ரகாளி அம்மனை இந்த தண்ணீரில் வந்து இறங்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக 2 மண் அகல் தீபம். இதில் வேப்பெண்ணையை ஊற்றி திரிபோட்டு அம்பாளை நினைத்து தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். அலங்காரம் செய்து வைத்திருக்கும் தட்டில், எலுமிச்சம் பழத்தை வைத்து இருப்பீர்கள் அல்லவா? அதன் முன்னே 2 மண் அகல் தீபங்களில் வேப்பெண்ணை ஊற்றி தீபமேற்ற வேண்டும். இந்த மண் அகல் தீபத்திற்கு கீழே கொஞ்சமாக வேப்பிலையை பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். இப்படியாக பராசக்தியை உங்கள் பூஜை அறையில் அமர வைத்து ஆவாகனம் செய்து வேப்பெண்ணையில் தீபம் ஏற்றி வைத்தால், உங்கள் வீட்டை பிடித்திருக்கும் எதிர்மறை ஆற்றல் உடனடியாக விலகிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பூஜையில் வைத்த எலுமிச்சம் பழத்தை அப்படியே பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை பூஜை முடித்த இரவு உங்கள் வீடு முழுவதும் மூலைமுடுக்குகளில் நன்றாக தெளித்து விடுங்கள். வெளியில் நிலை வாசல் படியில் இருந்து இந்த தண்ணீரை தெளித்து கொண்டே, வீட்டிற்குள் வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. முடியாதவர்கள் செவ்வாய்க் கிழமையிலும் செய்யலாம். வாரம் ஒருமுறை என்று, தொடர்ந்து 5 வாரங்கள் இந்த பூஜையை செய்தால், உங்களுக்கு இருக்கக்கூடிய மன பயம் நீங்கி வீட்டில் பிரச்சனை இருந்தாலும் சரி, பிரச்சனை இல்லை என்றாலும் சரி உங்களது பிரம்மை நீக்கப்பட்டு தெளிவான மனதை பெறுவீர்கள். அந்த பராசக்தியே உங்கள் வீட்டில் குடி விருவாள் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -