
“சிவாயம் என்றிட அபாயம் நீங்கும்” என்னும் பழமொழிக்கு ஏற்ப நாம் செய்யக்கூடிய சிவ வழிபாடு என்பது நம்முடைய கஷ்டங்களை தீர்க்கக்கூடிய வழிப்பாடாக திகழ்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கும். அந்த கஷ்டங்களின் தன்மையை பொறுத்து அவர்களுடைய வாழ்க்கை சூழ்நிலையும் மாறி இருக்கும். எப்பேர்பட்ட கஷ்டமாக இருந்தாலும் எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு இருந்தாலும் சிவாலயத்திற்கு சென்று எந்த முறையில் சிவபெருமானை வழிபட்டு அவரின் மந்திரத்தை உச்சரித்தால் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலகி நல்ல நிலைக்கு வருவோம் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் என்பது வந்து கொண்டு தான் இருக்கும். அந்த பிரச்சனைகளை சமாளித்து வெளியே வருவதுதான் புத்திசாலித்தனம். அந்த பிரச்சினைகளால் நமக்கு கஷ்டங்களும் உண்டாகத் தான் செய்யும். கஷ்டப்படாமல் எந்த ஒரு காரியத்தையும் நம்மால் செய்யவே முடியாது. அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் கஷ்டங்களும் பிரச்சனைகளும் மாறி மாறி வந்து கொண்டு தான் இருக்கும். அதுதான் மனித வாழ்க்கையின் இயல்பு. இந்த கஷ்டங்களில் இருந்து வெளியே வருவதற்கு வழி தெரியாமல் மாட்டிக் கொண்டு விழிக்கிறோம் என்னும் பட்சத்தில் அந்த கஷ்டங்களில் இருந்து நம்மை விடுவிப்பதற்கு அருளக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் சிவபெருமான்.
சிவபெருமானை பொதுவாக பிரதோஷ தினங்களில் வழிபாடு செய்வோம். அதேபோல் சோமவாரம் என்று கூறக்கூடிய திங்கட்கிழமை அன்றும் வழிபாடு செய்வது என்பது சிறப்பு. பிரதோஷங்களில் தலைசிறந்த பிரதோஷமாக திகழ்வது சனி மஹா பிரதோஷம். சனி மஹா பிரதோஷத்தன்று நாம் சிவபெருமானை வழிபாடு செய்தோம் என்றால் அதன் பலன் நமக்கு பல மடங்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் சிவபெருமானை வழிபாடு செய்பவர்கள் சனி மகா பிரதோஷத்தில் மறவாமல் வழிபாடு செய்ய வேண்டும்.
இதே போல் சிவபெருமானுக்கு உகந்த கிழமையாக திகழ்வது சோமவாரம் என்று அழைக்கக்கூடிய திங்கட்கிழமை. சோமவாரம் என்றாலே அது சந்திரனுக்குரிய நாள் சிவபெருமான் சந்திரனை தன்னுடைய தலையில் சூடி இருக்கிறார் என்பதால் சிவபெருமானுக்கு உகந்த நாளாகவும் திங்கட்கிழமை என்பது விளங்குகிறது. யாரெல்லாம் சந்திர பகவானை தங்களிடம் வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் சோமவாரமான திங்கட்கிழமை அன்று வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இப்பொழுது கஷ்டங்களை தீர்ப்பதற்கு சிவன் கோவிலில் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இதற்கு நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய நாட்கள் சனி பிரதோஷம் அல்லது திங்கட்கிழமை. திங்கட்கிழமை என்னும் பட்சத்தில் வாராவாரம் திங்கட்கிழமை இந்த வழிபாட்டை செய்யலாம். இயலாதவர்கள் மாதத்தில் ஒரு திங்கள் கிழமை இந்த வழிபாட்டை செய்யலாம். மாதத்தில் ஒரு திங்கட்கிழமை தான் இந்த வழிபாட்டை செய்யப் போகிறோம் என்றால் அது தேய்பிறை திங்கட்கிழமையாக இருப்பது மிகவும் நல்லது. அப்பொழுது தான் நம்முடைய கஷ்டங்களும் தேய்ந்து போகும் என்று கூறப்படுகிறது.
திங்கட்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். உங்களால் என்ன பொருட்களை அபிஷேகத்திற்கு வாங்கித் தர முடியுமோ அதை வாங்கி கொடுக்கலாம் அல்லது மலர்களை, வில்வ இலைகளை வாங்கி கொடுக்கலாம், அல்லது பிரசாதத்திற்காக ஏதாவது உங்களால் முடிந்த பொருட்களை வாங்கித் தரலாம். இது எல்லாம் உங்களுடைய விருப்பத்தின் அடிப்படையிலும் அதே சமயம் பொருளாதாரத்தின் அடிப்படையிலும் பொருத்தது.
சிவபெருமானை உள்ளே சென்று மனதார வழிபாடு செய்து விட்டு, சிவபெருமானின் கருவறையை பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். கோவிலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமரலாம். ஆனால் கருவறை எந்த திசையில் இருக்கிறதோ அந்த திசையை பார்த்தவாறு அமர வேண்டும். இவ்வாறு அமர்ந்த பிறகு முதுகை நேராக வைத்துக் கொண்டு “ஓம் அங் சிவாய நம” என்னும் மந்திரத்தை 308 முறை உச்சரிக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர பரிகாரம்
எந்த வித கவனச்சிதரலும் இல்லாமல் முழு மனதுடன் சிவபெருமானை நினைத்தவாறு கண்களை மூடி இந்த மந்திரத்தை முறையாக உச்சரிப்பவர்களுக்கு சிவபெருமானின் அருளால் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.