யாருக்கு தான் பிரச்சனை இல்லாத வாழ்க்கை இருக்கிறது. பிரச்சனையே வாழ்க்கையாக இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். பிரச்சினைகள் வருவதும் போவதும் சர்வசாதாரணம். வந்த பிரச்சனை போன பிறகு வேறு பிரச்சினை வந்தால் நம்மால் சமாளிக்க முடியும். வந்த பிரச்சனை போவதற்கு முன்பாகவே வேறொரு பிரச்சனை வந்து அந்த பிரச்சினைக்கு மேல் பிரச்சினையாக ஏற்படும் பொழுது தான் நம்மால் நிம்மதியாகவே இருக்க முடியாத ஒரு சூழ்நிலை உண்டாகிவிடும். இப்படி பிரச்சினைக்கும் மேல் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது, அதிலும் குறிப்பாக கடன் பிரச்சினையால் நிம்மதி இழந்து வாழ்கிறோம் என்னும் பச்சத்தில் நாம் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏற்படக்கூடிய ஒவ்வொரு விதமான பிரச்சினைகளுக்கு அவர்களுடைய கர்ம வினைகளே காரணமாக திகழ்கிறது. எப்பேர்பட்ட கர்ம வினையாக இருந்தாலும் அந்த கர்ம வினையை நீக்குவதற்கு நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த வழிமுறைகளை பின்பற்றும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் நீங்குவதோடு நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும் குறையும் என்று கூறப்படுகிறது.
அப்படி நம்மளுடைய கர்ம வினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏதாவது ஒரு பொருளை கஷ்டப்படுபவர்களுக்கு தானமாக தரவேண்டும் என்று கூறுவார்கள். தங்களால் இயன்ற தானத்தை பிறருக்கோ அல்லது பிற உயிர்களுக்கோ நாம் செய்யும் பொழுது அதன் பலன் நம்முடைய கர்ம வினைகளை குறிக்கும். அதிலும் குறிப்பாக உணவை நாம் தானம் தரும் பொழுது அது பல நன்மைகளை நமக்கு ஏற்படுத்தும்.
அந்த வகையில் இந்த பரிகாரத்தை நாம் செய்தால் நம்முடைய கர்ம வினைகள் தீருவதோடு கடன் பிரச்சினைகள் நீங்கும். நம்மை பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் மற்ற பிரச்சனைகளும் நீங்கும். பிரச்சினைகள் அதிகமாக இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை செய்யலாம். சாதாரண பிரச்சனைகள் தான் என்று நினைப்பவர்கள் மாதத்திற்கு ஒரு முறை செய்தால் போதும். தொடர்ச்சியாக இந்த பரிகாரத்தை செய்து கொண்டே இருந்தோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை எளிதில் நம்மால் சமாளித்து விட முடியும்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படுவது கோதுமை மாவு மட்டும்தான். கோதுமை மாவை சப்பாத்தி மாவு பிணைவது போல் தண்ணீர் ஊற்றி பிணைந்து கொள்ளுங்கள். பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக 108 என்ற எண்ணிக்கையில் உருட்டிக் கொள்ளுங்கள். உருட்டிய இந்த உருண்டையை எடுத்துக்கொண்டு அருகில் குளம் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அந்த குளத்தில் ஒவ்வொன்றாக உங்களுடைய பிரச்சினைகள் தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டே குளத்தில் போட வேண்டும்.
மொத்தமாக அப்படியே தூக்கிப் போடக்கூடாது. ஒவ்வொரு உருண்டைக்கும் உங்களுடைய பிரச்சினைகள் தீர வேண்டும் என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். இப்படி போடும் இந்த கோதுமை மாவு உருண்டையை அந்த குளத்தில் இருக்கும் மீன்கள் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் என்பது குறைய ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:கணவனின் ஆயுள் நீடித்து தொழில் சிறக்க பெண்கள் செய்யும் பரிகாரம்
அனைவரின் வீட்டிலும் இருக்கக்கூடிய கோதுமை மாவை வைத்து இந்த முறையில் நாம் பரிகாரம் செய்யும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் நீங்குவதோடு அதனால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.