- Advertisement -
இன்றைய செய்திகள்

குறிவைக்கப்பட்ட இரண்டு தலைவர்கள். பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை – முழுவிவரம்

புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை சரியாக 3.30 மணி அளவில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. பால்கோட் என்னும் பகுதியில் நடந்த இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதல் மிராஜ் 2000 எனும் 12 போர் ரக விமானங்கள் மூலம் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 1000 கிலோ வெடிகுண்டை ஜெய்ஷ்-இ-முகமது முகாம்களின் மீது வீசி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த முகம் முழுவதும் அழிந்து விட்டதாக தகவல்கள் வெளியானாலும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வளவே பெரிய சேதம் எதுவும் இல்லை என்று மழுப்பி வருகிறது. இந்நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு முகம் முழுவதுமாக அழிந்ததற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

குறிவைக்கப்பட்ட தலைவர்கள் : இரண்டு முக்கிய தீவிரவாதிகளை குறிபிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அதில் ஒருவர் மவுலானா அமர். இவர் ஆஃப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடையவர். மற்றொருவர் மவுலானா தால்ஹா சைஃப். இவர் மசூத் அசாரின் சகோதரர் ஆவார். இவர்கள் இருக்கும் இந்த முகாமானது பல்கோட் எனும் பகுதியில் பாக்கிஸ்தான் எல்லையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இடம் தற்போது முழுமையாக அழிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பலியானோரின் எண்ணிக்கை : இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 200 முதல் 300 தீவிரவாதிகள் பலியாகி இருப்பார்கள் என்ற நம்பிக்கையான தகவல்கள் நம் விமானப்படை அதிகாரிகள் தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Indian air force attack : தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம், வெடிகுண்டு மற்றும் தாக்கப்பட்ட இடம் குறித்த விரிவான பதிவு

- Advertisement -
Published by