தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம், வெடிகுண்டு மற்றும் தாக்கப்பட்ட இடம் குறித்த விரிவான பதிவு

Pulwama
- Advertisement -

புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை சரியாக 3.30 மணி அளவில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. பால்கோட் என்னும் பகுதியில் நடந்த இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதல் மிராஜ் 2000 எனும் 12 போர் ரக விமானங்கள் மூலம் நடத்தப்பட்டது.

Pulwama

இந்த தாக்குதலில் 1000 கிலோ வெடிகுண்டை ஜெய்ஷ்-இ-முகமது முகாம்களின் மீது வீசி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த முகம் முழுவதும் அழிந்து விட்டதாக தகவல்கள் வெளியானாலும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வளவே பெரிய சேதம் எதுவும் இல்லை என்று மழுப்பி வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம், வெடிகுண்டு மற்றும் தாக்கபட்ட இடம் குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

மிராஜ் 2000 போர் ரக விமானம் சுமார் 1700கிலோ அளவிலான பொருட்களை சுமந்து விண்ணில் பறக்கும் திறன்கொண்டது. மேலும் 32 தனித்தனி இருக்கைகள் கொண்ட இந்த விமானம் தரையில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது. இதன் அதிகபட்ச வேகமானது ஒரு மணிநேரத்துக்கு 2300 கி.மீ வேகத்தில் கடக்கும் திறன் கொண்டது. இந்த போர் விமானத்தின் மூலம் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கினையும் லேசர் திறனின் உதவி மூலம் துல்லியமாக தாக்க முடியும்.

Vijay-Gokhale

மேலும், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இஸ்ரேல் நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டவகைகள் ஆகும். இந்த தாக்குதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள 3 இடங்களில் நடத்தப்பட்டது. அதில் முதன்மையாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு முகாம்கள் அதிகம் உள்ள பால்கோட் என்ற இடத்தில அதிக அளவு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Indian air force attack : விமான படை தாக்குதல் எதிரொலி : அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை

- Advertisement -