- Advertisement -

கஷ்டங்களை தீர்க்கும் சோமவார பிரதோஷம்

- Advertisement -

இந்த உலகமே அழிவதற்கு காரணமாக இருக்கக்கூடிய ஆழகால விஷயத்தில் இருந்து இந்த உலகத்தை காப்பாற்றியவராக இருப்பவர்தான் சிவபெருமான். அப்படிப்பட்ட திருவிளையாடல் நடைபெற்ற நாளாக தான் பிரதோஷ நாள் திகழ்கிறது. இந்த பிரதோஷ நாளில் நாமும் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமான் நம்முடைய கஷ்டங்களில் இருந்தும் நம்மை காப்பாற்றுவார். அதிலும் இந்த முறை பிரதோஷம் திங்கட்கிழமையோடு சேர்ந்து வந்து சோமவார பிரதோஷமாக திகழ்கிறது. இந்த நாளில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சோமவார பிரதோஷ வழிபாடு

சிவபெருமானுக்கு உகந்த கிழமையாக திங்கட்கிழமை திகழ்கிறது. அப்படிப்பட்ட திங்கட்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷமாக திகழ்வதுதான் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி வரக்கூடிய சோமவார பிரதோஷம். இந்த நாளில் நாம் சிவபெருமானை முழுமனதோடு வழிபாடு செய்வதோடு ஒரு சில சூட்சமமான பொருட்களையும் சேர்த்து வைத்து வழிபாடு செய்ய நம் வாழ்வில் இதுவரை தீரவே தீராத கஷ்டம் என்று கருதிய கஷ்டமும் கரைந்து போகும். அப்படிப்பட்ட வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

நவம்பர் மாதம் மூன்றாம் தேதி திங்கட்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி விரதத்தை தொடங்க வேண்டும். அவ்வாறு தொடங்கும் பொழுது கையில் சிறிதளவு பச்சரிசியை எடுத்து முழு மனதோடு சிவபெருமானை வேண்டிக் கொண்டு பறவைகளுக்கு தானமாக தர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளையும் சந்திர பகவானின் அருளையும் பரிபூரணமாக பெறலாம்.

மேலும் அன்று மாலை பிரதோஷ நேரமான நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் ஒரு பெரிய தாம்பாள தட்டை எடுத்து அதில் பச்சரிசியை பரப்பி அதற்கு மேல் பனிரெண்டு நெல்லிக்கனி தீபத்தை வட்ட வடிவில் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை தயார் செய்து வைத்து தீபம் ஏற்றுவதற்கு முன்பாக ஒரு வெற்றிலையை அந்த தாம்பாளத்தின் நடுவில் வைத்து அதற்கு மேல் மஞ்சளால் பிடிக்கப்பட்ட பிள்ளையாரையும் மஞ்சளால் பிடிக்கப்பட்ட சிவலிங்கத்தையும் வைத்து பிறகு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றிய பிறகு “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தையும் “ஓம் சிவாய நம” என்னும் மந்திரத்தையும் “ஓம் சிவ சிவ ஓம்” என்னும் மந்திரத்தையும் 54 முறை கூறி மஞ்சளால் செய்து வைத்த சிவலிங்கத்திற்கு வாசனை மிகுந்த மலர்களாலோ வில்வ இலைகளாலோ அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு அந்த தீபச்சுடளொளியை பார்த்தவாறு தங்களுடைய கஷ்டத்தை சிவபெருமானிடம் முழுமனதோடு கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டையும் விரதத்தையும் நிறைவு செய்து கொள்ளலாம். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அன்று இரவு முழுவதும் மஞ்சளால் பிடிக்கப்பட்ட பிள்ளையாரும் சிவலிங்கமும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் அதை தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அந்த மஞ்சளை வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் தங்களுடைய நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குபேர சம்பத்தை பெற உதவும் வழிபாடு

சிவபெருமானுக்குரிய கிழமையில் சிவபெருமானுக்குரிய பிரதோஷ நாள் வருவது என்பது மிகவும் சிறப்பு. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளில் நம்முடைய கஷ்டங்கள் தீர இந்த முறையில் சிவபெருமானை வழிபாடு செய்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -