- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுபேர சம்பத்தை பெற உதவும் வழிபாடு

குபேர சம்பத்தை பெற உதவும் வழிபாடு

- Advertisement -

செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார் என்றாலும் அந்த செல்வ செழிப்பிற்குரிய கணக்கை சரிவர பராமரித்து யாருக்கு செல்வத்தை தர வேண்டும் யாருக்கு செல்வத்தை தரக்கூடாது என்பதை தீர்மானிக்கக்கூடிய ஒருவராக திகழக்கூடியவர்தான் குபேர பகவான். குபேர பகவானுக்கு இந்த அந்தஸ்து கிடைப்பதற்கு முக்கியமான காரணமாக திகழ்ந்தவர் சிவபெருமான். சிவபெருமானின் தீவிர பக்தராக இருக்கக்கூடியவர் தான் குபேர பகவான், மேலும் குபேர பகவான் சிவபெருமானை நினைத்து தவமிருந்து வழிபாடு செய்ததன் பலனால் தான் குபேரருக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது என்றும் புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட குபேர பகவானுக்குரிய சிறப்பு மிகுந்த மாதமான இந்த நவம்பர் மாதத்தில் குபேரரின் அருளை பெறுவதற்கு செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குபேர சம்பத்தை பெற வழிபாடு

மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதன் மூலம் செல்வ செழிப்பு உயரும் என்று நம் அனைவருக்குமே தெரியும். மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதோடு குபேர பகவானையும் நாம் வழிபாடு செய்தால் தான் மகாலட்சுமி தாயார் கொடுக்க வேண்டும் என்று நினைத்த செல்வத்தை நம்மால் பெற முடியும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவராக தான் குபேர பகவான் திகழ்கிறார். அப்படிப்பட்ட குபேர பகவானின் அருளை பெறுவதற்கு நவம்பர் மாதம் முழுவதும் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

நவம்பர் மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் நாம் குபேர பகவானை கண்டிப்பான முறையில் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதற்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருள் இருந்தால் போதும். ஒரு லட்டு, டைமண்ட் கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை, வெள்ளை சர்க்கரை என்று எது இருந்தாலும் போதும். இதனுடன் ஒரே ஒரு ரூபாய் நாணயவும் இருக்க வேண்டும். இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் குளிக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. முகம் கை கால்களை கழுவி விட்டு அமைதியாக ஒரு இடத்தில் வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு அமரும் பொழுது தரையில் விரிப்பை விரித்து அமர்ந்து கொள்ள வேண்டும்.

வலது கையில் இனிப்பையும் அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து இடது கையால் மூடிக்கொள்ளுங்கள். உங்களுடைய நெஞ்சுக்குழியில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு குபேர பகவானின் மந்திரமான “ஓம் கும் குபேராய நமஹ” என்னும் மந்திரத்தை 27 முறை கூற வேண்டும். பிறகு குபேரரின் துதியை ஒரு முறை கூறிவிட்டு குபேர பகவானிடம் செல்வ செழிப்பு உயர வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து கையில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயத்தை அன்றைய தினம் நாம் செலவு செய்யக் கூடிய பணத்துடன் வைத்துவிட்டு இனிப்பை வடக்கு திசை பார்த்தவாறு வீட்டிற்கு வெளியே தூவி விட வேண்டும்.

- Advertisement -

அந்த ஒரு ரூபாய் நாணயத்தை அன்றைய தினமே அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்தின் உண்டியலில் போட்டு விட வேண்டும். தினமும் ஆலயத்திற்கு செல்ல இயலவில்லை என்பவர்கள் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை அன்று முழுவதும் தங்களுடன் வைத்துவிட்டு மறுநாள் அடுத்த ஒரு ரூபாயை எடுக்கும் பொழுது இதை எடுத்து தனியாக வைத்து நவம்பர் மாதம் முழுவதும் ஒன்று சேர்த்து உண்டியலில் போட்டுவிடலாம். இந்த வழிபாட்டை தினமும் செய்ய வேண்டும். தினமும் ஒரு ரூபாய் நாணயத்தையுமை இனிப்பையும் கையில் வைத்துக்கொண்டு குபேரரின் மந்திரத்தையும் துதியையும் சொல்லி உபயோகப்படுத்துவதன் மூலம் குபேர சம்பத்து உண்டாகும்.

குபேர துதி

” வளம் யாவும் தந்திடுவாய் வைஷ்ணவனே போற்றி
தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி
குறைவில்லா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி
சங்கநிதி பதுமநிதி சார்ந்து நிற்பாய் போற்றி
மங்களங்கள் தந்து எம்மை மகிழ்விப்பாய் போற்றி
உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி
பொங்கிடும் நலம் யாவும் உன் அருளே போற்றி போற்றி
குபேரா போற்றி போற்றி “

இதையும் படிக்கலாமே: நவம்பர் மாதம் சிறப்பு மிகுந்த மாதமாக அமைய

செல்வ செழிப்புடன் அனைத்து விதமான சம்பத்துகளையும் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் குபேர பகவானுக்குரிய இந்த வழிபாட்டை நவம்பர் மாதம் முழுவதும் செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்