- Advertisement -

ஆசைப்பட்ட வேலை கிடைக்க சூரிய வழிபாடு

- Advertisement -

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் சக்கரம் போல் இருப்பது இந்த வேலை. வேலை செய்தால் தான் வாழ்க்கை என்னும் நம் வண்டி ஓடுகிறது. இந்த வேலை எவ்வளவு பேருக்கு பிடித்தமானதாக அமைகிறது? மனதிற்கு பிடித்த வேலையை செய்தால் தான், அதில் நல்ல முன்னேற்றம் காண முடியும். பிடித்த வேலை அமைய 40 நாட்கள் சூரியனை எப்படி வழிபடுவது? சூரிய வழிபாட்டால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

மிகப்பெரிய தொழில்கள், அரசாங்க வேலைகள் அனைத்திற்கும் சூரிய பகவான் காரகத்துவம் பெற்றுள்ளார். சூரிய வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு தொழில், வியாபார ரீதியான பிரச்சினைகள் எதுவும் இருக்காது. மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமைய, இஷ்டப்பட்டு வேலை செய்ய நினைப்பவர்களுக்கு இந்த சூரிய வழிபாடு நல்ல பலன் தரும்.

- Advertisement -

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக சூரிய உதயத்தை பார்ப்பவர்களுக்கு அந்த நாள் முழுவதும் பொதுவாகவே சுறுசுறுப்பாக இருக்கும். அதனால் தான் காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும் என்று நம் பெரியோர்களால் வலியுறுத்தப்படுகிறது. காலையில் முதல் சூரியன் ஆரஞ்சு நிறத்தில் சிவந்து போய் உதிக்கும். இந்த சூரியனை காண்பதற்கு அதற்கு முன்னரே எழுந்து குளித்து முடித்து விட வேண்டும்.

பின் சூரிய உதயம் ஆனதும் சூரியனை பார்த்தபடியே கையில் கொஞ்சம் கடுகு எண்ணெயை வைத்துக் கொள்ளுங்கள். சூரியனை வணங்கிவிட்டு கையில் இருக்கும் கடுகு எண்ணெயில் ஒரு சில சொட்டுகளை கீழே தரையில் பூமியில் விடுங்கள். பின்னர் சூரிய பகவானை மனதாரப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். நினைத்த வேலை கிடைக்க வேண்டும், எதிர்பார்த்த வேலை தடையில்லாமல் எனக்கு அமைய வேண்டும், அரசாங்க உத்தியோகம் கிடைக்க வேண்டும், எதிர்பார்த்து காத்திருக்கும் வேலை எனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று உங்களுக்கு மனதில் தோன்றியதை வேண்டுதல் வையுங்கள். சூரியனை பார்த்தபடி கடுகு எண்ணெய் கீழே பூமியில் விடும் பொழுது கீழ் வரும் இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரியுங்கள்.

- Advertisement -

சூரிய பகவான் காயத்ரி மந்திரம்:

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்!!!

ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவான் கோவிலுக்கு சென்று சூரிய பகவானை வழிபட்டு வர வேண்டும். நீண்ட காலம் தள்ளிப் போய்க் கொண்டிருந்த வேலை, சரியாக அமையாத எதிர்பார்த்த வேலை கிடைக்க தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஞாயிறு கோவிலுக்கு செல்லுங்கள். ஒரு தாமிர பாத்திரத்தில் கோதுமையும், சிகப்பு நிற வஸ்திரமும், தாமரை பூவும் வைத்து, சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து சூரிய பகவானை வணங்கி வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
வெள்ளிக்கிழமை காகத்திற்கு சாப்பாடு வைக்கும் முறை

ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் சூரிய பகவானை வேண்டி சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து மேற்கூறிய சூரிய மந்திரத்தை உச்சரித்து பிரார்த்திக்க வேண்டும். இது போன்ற பரிகாரங்களை தொடர்ந்து சூரிய பகவானுக்கு நீங்கள் செய்து வரும் பொழுது எதிர்பார்த்த வேலை நிச்சயம் அமையும். 40 நாட்கள் தவறாமல் சூரியனை வழிபடுபவர்களுக்கு ஆசைப்பட்ட வேலை கிடைக்கும் என்பது ஐதீகம். பிடித்த வேலை கிடைத்து மனதிற்கு நிறைவான வாழ்க்கை அமைய சூரியனாரை இம்முறையில் வழிபட்டு பயனடையுங்கள்.

- Advertisement -