
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இறப்பதற்குள் கொஞ்சம் நிலத்தையாவது தனது சொத்தாக்கி கொள்ள வேண்டும் என்று தான் அதிகமாக விரும்புகின்றான். வாங்கிய நிலமோ அல்லது வீடோ பிரச்சனைகளுக்கு உள்ளாகும் பொழுது அவன் மோசமாக பாதிக்கப்படுகின்றான். இதிலிருந்து மீண்டு வரவும், சொத்து பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் தரும். சொத்து பிரச்சனைக்கு தீர்வு தரும் பரிகாரத்தை இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.
வாழ்நாளில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை அல்லது பாகப்பிரிவினைக்குப் பிறகு கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனக்கென ஒரு சொத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது, அதில் சிலர் ஏமாற்றி விடுகின்றனர். சொந்த உறவுகள் கூட சில நேரங்களில் பகைவர்கள் போல யோசித்து, நமக்கு எதிராக செயல்படுவார்கள். ரத்த பந்த உறவுகளுக்குள் துரோகங்களும், ஏமாற்றங்களும் நிகழும் பொழுது, மனம் உடைந்து போகிறது. அப்படி இருக்க மூன்றாம் நபர்களிடம் மட்டும் எப்படி அஜாக்கிரதையாக இருப்பது? சொத்து விஷயத்தில் மட்டும் யாரையும் நம்பாமல், நமக்கான உரிமைகளை, உழைப்பை தக்க வைத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.
நிலம், வீடு, தோட்டம், தொழிற்சாலை என்று எந்த சொத்தாக இருந்தாலும் அதில் பிரச்சனை இருப்பவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம். ஸ்ரீ துர்கை அம்மன் சொத்து பிரச்சனைகளுக்கு நல்ல பலன்களை வழங்கக் கூடியவர். மகா துர்க்கை அம்மனை வழிபட்டால் பகைவர்களும் பஸ்பம் ஆகி விடுவார்கள். துரோகம் புரிந்தவர்கள், ஏமாற்றியவர்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு அவர்களிடமிருந்து நியாயத்தை வழங்க கூடியவர் துர்க்கை அம்மன்.
துர்கை அம்மன் மந்திரம் :
ஓம் ஹ்ரீம் தும் துர்க்காயை நமஹ
துர்க்கை அம்மனின் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை 108 முறை வெள்ளிக்கிழமையில் உச்சரிக்க வேண்டும். துர்க்கை அம்மன் சன்னதிக்கு சென்று பட்டுடை அணிவித்து, குங்குமத்தை தானம் செய்யுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வர சொத்து ரீதியான பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்பது நம்பிக்கை.
நில தகராறுகள், வீட்டு பிரச்சினைகள் இருப்பவர்கள் ஒரு புதிய செங்கல்லை வாங்கிக் கொள்ளுங்கள். செங்கல்லை தேனால் அபிஷேகம் செய்து, ஒரு சிகப்பு நிற துணியில் கட்டிக் கொள்ளுங்கள். பின் துர்க்கை அம்மனின் மந்திரத்தை மூன்று முறை சொல்லி, எந்த நிலத்தில் அல்லது வீட்டில் பிரச்சனை இருக்கிறதோ, அங்கு கொண்டு போய் மண்ணில் புதைக்க வேண்டும். இப்படி செய்தால் விரைவிலேயே சொத்து பிரச்சனை தீரும்.
மற்றவர்களால் உங்களுடைய சொத்து அனைத்தும் பறிகொடுத்து நிற்பவர்கள், இதே போல செங்கல்லை தேனால் அபிஷேகம் செய்து ஒரு சிகப்பு துணியில் கட்டி அதை ஓடும் நீரோடையில் விட்டு விடுங்கள். ஏமாந்த சொத்தை திரும்ப பெற, வெள்ளிக்கிழமை தோறும் துர்க்கை அம்மன் சன்னதிக்கு சென்று வழிபட்டு எலுமிச்சை தீபம் ஏற்றி வாருங்கள். மேலும் அங்கு வரும் பக்தர்களுக்கு புளியோதரை, பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் படைத்து பின் தானம் செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே:
சொத்து பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் சரியாக அமையாவிட்டால் பெரும்பாலும் வரக்கூடியது ஆகும். நான்கில் சனி மற்றும் செவ்வாய் இருந்தால் சொத்து ரீதியான பிரச்சினைகளை சந்திப்பீர்கள். இவர்கள் சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். மேலும் காகத்திற்கு எள்ளும், அன்னமும் கலந்து உணவை வைக்க வேண்டும்.