- Advertisement -
ஆரோக்கியம்

வெந்நீர் குடிப்பதன் பயன்கள் மற்றும் அதில் உள்ள நன்மைகள்

நம்மில் பலர் காலையில் எழுந்த உடன் காபி, டீ அல்லது தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். காலையில் தண்ணீர் அருந்தும் பலர் பொதுவாக வெந்நீர் அருந்துவது கிடையாது. ஆனால் வெறும்வயிற்றில் வெந்நீர் அருந்துவதால் பசி நன்கு எடுக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு வெந்நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகலும் என்று கூறப்படுகிறது.

உணவிற்கு பிறகு வெந்நீரை அருந்துவதால் கெட்ட கொழுப்பு நம் உடலில் சேராது என்று கூறப்படுகிறது. அதோடு இதன் மூலம் ரத்தத்தில் உள்ள நஞ்சுக்கள் வெளியேற்றப்பட்டு ரத்தம் சுத்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்துவதால் தோலுக்கு நல்லது. இதன் மூலம் இளமையிலேயே வயதான தோற்றம் கொண்டவர்கள் தன் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்று கூறப்படுகிறது.

அடிக்கடி காபி, டீ குடிப்பவர்கள் அதற்கு மாற்றாக சுடு தண்ணீரில் சுக்கு கலந்து குடிப்பது சிறந்தது. இதன் மூலம் வாயு தொல்லையில் இருந்து விடுபட முடியும்.

- Advertisement -

மாதவிடாய் சமயங்களில் பெண்கள் வெந்நீர் அருந்துவது சிறந்தது. இதன் மூலம் அவர்களுக்கு தேவையற்ற தலைவலி வராது என்று கூறப்படுகிறது. அதோடு அஜீரண கோளாறும் இதன் மூலம் நீங்கும்.

உடல் எடையை குறைக்கு நினைப்போர் தினமும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வர, நாளடைவில் எடை குறைந்து கொண்டே வரும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கண் பார்வை சரியாக கை வைத்தியம்

ஆய்வின் படி, ஒருவர் அதிகப்படியான டென்ஷனில் இருக்கும்பொழுது வெந்நீர் அருந்தினால், டென்ஷன் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

கை வைத்தியம், பாட்டி வைத்தியம், சித்த மருத்துவம் மற்றும் ஆன்மீக தகவல்களை அறிந்துகொள்ள தெய்வீகம் முக நூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -