- Advertisement -
வீட்டு குறிப்புகள்

இந்த வெயில் காலத்தில் ஏசியே இல்லனா கூட குளுகுளுன்னு தூங்கினா எப்பிடியிருக்கும். அப்படின்னா இதை கொஞ்சம் ட்ரை பண்ணுங்க. இது தெரியாம வெக்கையில கிடந்தோமே பீல் பண்ணுவீங்க.

- Advertisement -

கோடைக்காலம் என்றாலே நாம் முதலில் பயப்படுவது இந்த வெயிலுக்கு தான். வீட்டிலும் இருக்க முடியாது வெளியிலும் எங்கும் செல்ல முடியாது. அதிலும் பகல் எல்லாம் வெளியில் வேலை செய்து களைத்து இரவு வீட்டுக்கு வந்து கதவை திறந்தால் போதும் நெருப்புக் கொண்டுக்குள் செல்வது போல இருக்கும். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் இருக்கும் ஒரு சில குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் உங்க வீடு ஏசியே இல்லாம கூட குளு குளு இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

இந்த டிப்ஸ் உங்களுக்கு ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். இப்போதெல்லாம் எல்லாருமே தளம் போட்ட வீட்டில் தான் இருக்கிறோம். அந்த தளத்தை சில்லென்று மாற்றி விட்டாலே போதும். உங்கள் படுக்கையறை குளுமையாக மாறி விடும். படுக்கை அறைக்கு மேலே தளத்தில் உங்கள் வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் பழைய பாய், பெட்ஷிட், சாக்கு பை போன்றவற்றை நன்றாக நினைத்து உங்கள் படுக்கை அறைக்கு மேலே உள்ள தளத்தில் போட்டு விடுங்கள். இதை இரவு 7 மணிக்கு மேல் செய்து கொள்ளுங்கள். அப்புறம் பாருங்க இரவு முழுவதும் உங்கள் படுக்கையறை நல்ல குளுமையாக இருக்கும் நிம்மதியாக தூங்கலாம்.

- Advertisement -

அடுத்தது மதிய வேளைகளில் படுக்கை அறையில் இருக்கும் ஜன்னல்களை மூடி அதற்கு மேல் ஒரு கனமான துணிகளை போட்டு மூடி விடுங்கள். வெப்பம் உங்கள் அறையில் வராமல் பார்த்துக் கொண்டாலே, அறை முழுவதும் குளுமையாக இருக்கும்.

மாலை 7 மணிக்கு மேல் உங்கள் ஜன்னல்களை எல்லாம் திறந்து வைத்து விடுங்கள். அதன் பிறகு அகலமான பாத்திரத்தில் நல்ல குளிர்ந்த நீராக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு சொட்டு மட்டும் கம்போட்டை ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நல்ல மெலிதான ஒரு காட்டன் துணி எடுத்து இந்த நீரில் நனைத்து நன்றாக பிழிந்து ஜன்னலில் போட்டு விடுங்கள். அதன் பிறகு வெளியில் இருந்து வரும் காற்று இதன் வழியில் பட்டு வரும் போது அறை முழுவதும் குளுமையாக இருக்கும். அது மட்டும் இன்றி கம்போர்ட் சேர்த்து இருப்பதால் ஈரத் துணியின் வாடையும் வீசாது.

- Advertisement -

பகல் வேளையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். அது கட்டியாக மாறி விடும். இரவு நீங்கள் படுக்கும் அறையில் டேபிள் பேனை வைத்து அதன் அருகில் இந்த ஐஸ்கட்டியான பாத்திரத்தையும் வைத்து விடுங்கள். இதில் பட்டு வரும் காற்றால் அறை முழுவதும் குளுகுளுவென்று இருக்கும்.

இரவு படுக்கும் சிறிது நேரத்திற்கு முன்பாக படுக்கை அறையில் உள்ள விளக்குகளை எல்லாம் அனைத்து விடுங்கள். மின் விளக்குகளின் மூலம் அதிக அளவு வெப்பம் வெளியேறும். நீங்கள் உறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னமே அணைத்து விடுவதால், இந்த வெப்பம் உங்கள் அறையில் பரவாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சமையல் கட்டில் சடுகுடு ஆடித் திரியும் இந்த கரப்பான் பூச்சி தொல்லைக்கு ஒரு முடிவு கட்ட இன்னைக்கு ஒரு புது ஐடியாவை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

இந்த வெயில் காலத்தின் தாக்கத்தை சமாளிக்க இந்த பதிவில் உள்ள குறிப்புகள் எல்லாம் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று தோன்றினால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -