சமையல் கட்டில் சடுகுடு ஆடித் திரியும் இந்த கரப்பான் பூச்சி தொல்லைக்கு ஒரு முடிவு கட்ட இன்னைக்கு ஒரு புது ஐடியாவை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

cockroch
- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு பெரிய தொல்லை. கணவர் தொல்லையையும் தாண்டி, இந்த தொல்லை அதிகமாக இருக்கும். கரப்பான் பூச்சி தொல்லை. கரப்பான் பூச்சிகளின் அட்டகாசம் சமையல் கட்டில் தாங்கவே முடியாது, அப்படி ஒரு பெரிய பிரச்சனை. ஹிட் அடித்தால் கூட இரண்டு மூன்று நாட்களில் மீண்டும் கரப்பான் பூச்சிகள் வர தொடங்குகிறது. இந்த பிரச்சினையை நிரந்தரமாக ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் என்ன செய்யலாம். இன்னைக்கு ஒரு புது வழியை தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேருக்கு இது தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களாக இருந்தால் நீங்கள் புதியதாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

கரப்பான் பூச்சிக்கு நிரந்தர முடிவு கட்ட புது வழி:
தினமும் இரவு சமைத்து முடித்து சாப்பிட்ட பிறகு சமையல் கட்டை மூடுவதற்கு முன்பு, அதாவது இரவு நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு, சமையலறையை சுத்தம் செய்துவிட்டு தான் போக வேண்டும். எச்சில் பாத்திரங்களை சிங்கிள் போட்டு வைக்கக்கூடாது. மேடை மேலே இருக்கக்கூடிய சாப்பாட்டை சுத்தமாக சுத்தம் செய்துவிட்டு சமையலறையை துடைத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் டெட்டால் 1 மூடி, தண்ணீர் சிறிதளவு ஊற்றி, அதில் துணியை தொட்டு, இந்த துணியை கொண்டு ஸ்டவ் சிங்குக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய இடங்கள் சுவற்றில் ஒட்டி இருக்கும் டைல்ஸ் எல்லா இடங்களிலும் துடைத்துவிட்டு சென்றால் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.

இது தவிர இந்த கரப்பான் பூச்சி தொல்லைக்கு முடிவு கட்ட இன்னும் ஒரு சூப்பர் ஐடியா. மெடிக்கல் ஷாப்பில் போய் இந்த பொருளை நீங்கள் காசு கொடுத்து வாங்க வேண்டும். அதிக விலை எல்லாம் கிடையாது. குறைந்த விலையிலேயே கிடைக்கும். போரிக் ஆசிட் (boric acid) என்று கேட்டு வாங்குங்கள். ஒரு சிறிய அட்டை பெட்டி டப்பாவில், பார்ப்பதற்கு ஆப்ப சோடா மாதிரி வெள்ளையாக இது இருக்கும்.

- Advertisement -

வாங்கி பிரித்து இதிலிருந்து 1 ஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இதோட 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கலந்தால் ஒரு பேஸ்ட் போல நமக்கு கிடைக்கும். பல் தேய்க்கும் பேஸ்ட் போலவே கிடைக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பேஸ்டை உங்கள் சிங்குக்கு கீழே, கபோர்டுக்கு உள்ளே எந்த இடத்தில் எல்லாம் கடப்பான் பூச்சி ஒளிந்து திரிகிறதோ, அந்த இடத்தில் எல்லாம் லேசாக அப்படியே, தொட்டு தொட்டு தடவ வேண்டும். இந்த வாசனைக்கு கரப்பான் பூச்சியால் தாக்கு பிடிக்கவே முடியாது. ஓடி ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சி எல்லாம் வெளியே வந்து மயங்கிவிடும். அதன் பிறகு நீங்கள் அதை அப்புறப்படுத்தி விடலாம்.

- Advertisement -

எல்லா பொருளுக்குமே பவர் சிறிது நாட்கள் தானே இருக்கும். மாதத்திற்கு ஒரு முறை பழைய பேஸ்ட்டை துடைத்து விட்டு, மீண்டும் இந்த பவுடரை போட்டு சர்க்கரை கலந்து நீங்கள் பயன்படுத்தி வர வேண்டும். நீங்கள் வாங்கிய டப்பாவில் கொஞ்சம் நிறைய பவுடர் இருக்கும். தேவையான அளவு எடுத்து பயன்படுத்தி மீதம் இருப்பதை காற்று போகாமல் பேக் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: தினமும் நீங்கள் பயன்படுத்தும் தங்க நகையை வீட்டிலேயே கெமிக்கல் இல்லாமல் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா? இப்படி செஞ்சா புதுசு போலவே இருக்குமே!

இந்த எளிமையான குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா இதே போல ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா கரப்பான் பூச்சி தொல்லைக்கு ஒரு முடிவு கட்ட இந்த குறிப்பு உங்களுக்கு கை மேல் பலனை கொடுக்கும். இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு ஒர்க் அவுட் ஆச்சுன்னா, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்யலாம்.

- Advertisement -