- Advertisement -

தை வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வீட்டிற்கு வர மந்திரம்

- Advertisement -

நாம் அனைவருக்கும் மகாலட்சுமியை ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் மகாலட்சுமிக்கு ரொம்பவும் பிடித்தது யாரு. அந்த பெருமாள்தான். எப்போதுமே மகாலட்சுமி வழிபாடு செய்வதற்கு முன்பு, பெருமாளுக்கு இரண்டு துளசி இலைகளை சமர்ப்பணம் செய்துவிட்டு, கோவிந்தா, நாராயணா, ஸ்ரீனிவாசா, வெங்கடரமணா, என்று அந்த பெருமாளை வழிபாடு செய்துவிட்டு, பின்பு மகாலட்சுமி வழிபாடு செய்வது என்பது மிக மிக சிறப்பான பலனை பல மடங்கு நமக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவிற்குள் பயணம் செய்வோம்.

நாளைய தினம் தை மாதத்தில் வந்திருக்கும் வெள்ளிக்கிழமை. மகாலட்சுமியை கட்டாயம் எல்லோர் வீட்டிலும் அழைப்போம். பூஜை அறையில் மகாலட்சுமிக்கு பூஜை செய்வோம். அப்படி பூஜை செய்யும்போது மகாலட்சுமி தாயாரை இந்த பெயரைச் சொல்லி வீட்டிற்குள் கூப்பிட்டு பாருங்களேன். லட்சுமி தாயார் அப்படியே ஓடோடி உங்கள் வீட்டிற்குள் வந்து விடுவாள்.

- Advertisement -

உங்கள் வீடு மாளிகையாக மாறும். தங்க நகைகள் சேரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவான வாழ்க்கை கிடைக்கும். வீடு சுபிட்சம் அடையும். கேட்கும்போதே காதுகளில் தேன் பாய்கிறது அல்லவா. இதையெல்லாம் வரமாக பெறக்கூடிய அந்த ஒரு வார்த்தை என்ன. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்க மந்திரம்

மகாலட்சுமிக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பூ தாமரைப்பூ. முடிந்தால் ஒரு தாமரைப்பூ வாங்கி பூஜையறையில் வையுங்கள். பொருளாதார சூழ்நிலை, வெள்ளிக்கிழமை தாமரைப்பூ வாங்க முடியாது என்று சொல்பவர்கள், தாமரை பூவை மானசீகமாக மனதில் நினைத்து தாயாருக்கு சூட்டியதாக நினைத்துக் கொள்ளலாம். தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு “அம்மா பத்மாவதி தாயாரே வருக வருக ! அம்மா பத்மாவதி தாயாரே எங்கள் வீட்டிற்குள் வருக வருக!” என்று கூப்பிட்டுப் பாருங்கள். அந்த தாயார் உங்கள் வீட்டிற்குள் எப்படி வருகை தருகிறார்கள் என்பதை நீங்களே ஏதாவது ஒரு ரூபத்தில் உணருவீர்கள்.

எப்படி வருவாங்க. யாராவது ஒரு பெண்ணின் ரூபத்தில், மகாலட்சுமி அம்சத்தோடு உங்களுடைய வீட்டிற்கு ஒரு பெண் வருகை தருகிறாள். பூஜை செய்து முடித்த பிறகு மனநிறைவாக, சந்தோஷமான செய்தி தொலைபேசியில் வருகிறது, அல்லது உங்களை அறியாமல் இனம் புரியாத சந்தோஷம் வருகிறது. வீட்டில் ஏற்றி வைத்திருக்கும் ஊதுவத்தி வாசம், மகாலட்சுமிக்கு சூட்டி வைத்திருக்கும் அந்த மல்லிகை பூ வாசம், இதையெல்லாம் நீங்கள் இதனால் வரை உணர்ந்து இருக்க மாட்டீர்கள்.

- Advertisement -

ஆனால் அந்த சமயத்தில் இந்த வாசம் உங்களை அப்படியே மயக்கிவிடும். இப்படி எந்த நல்ல சகுனம் தெரிந்தாலும் சரி அந்த மகாலட்சுமியின் பரிபூரண அருளும் தரிசனமும் உங்களுக்கு கிடைத்துவிட்டது என்று தான் அர்த்தம். அந்த பத்மாவதி தாயார் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நீ என்னை எப்போது இந்த பெயரைச் சொல்லி அழைப்பாய். உன்னுடைய வீட்டிற்கு இதோ நான் வந்து விடுகிறேன் என்று சொல்லி ஓடி வருவார்கள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: குல தெய்வம் வீட்டிற்கு வர வழிபாடு

நாளை வரக்கூடிய வெள்ளிக்கிழமை, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பெண்கள் அழகாக அலங்காரம் செய்து கொண்டு, மருதாணி இட்ட கைகளோடு, இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். உங்களுக்கான செல்வ வளம் கோடி கோடியாக கொட்டும். மன நிம்மதிக்கு குறைவே இருக்காது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு நல்ல பலனை தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by